ஆழ்மனதின் ஆற்றல் 1

ஆழ்மனதின் ஆற்றல் 1

சந்திரகாந்தனும்,கன்யாவும் தங்கள் குழந்தை சங்கமித்ராவுடன் விடுமுறைக்கு மஹாராஷ்டிராவில் இருந்து ஒரிசா செல்ல திட்டமிட்டனர்.
ஒரிசா சுற்றுலா பயணிகள் தகவல் மையத்தில் கேட்டு தெரிந்தவற்றை கன்யாவுடன் பகிர்ந்துகொள்ள வீட்டில் ஒரு ஞாயிறு அன்று சாப்பிட்டபின் கூற தொடங்க, கன்யா இந்த முறை ட்ரெக்கிங் செல்ல ஏதுவான இடங்களுக்கு செல்லலாமே என ஒரு யோஜனை கூற,
சந்திரகாந்தன் சிந்திக்க தொடங்கினான். அவனுக்கு அவன் சிறிய வயதில் கேட்டறிந்த கல்சுபாய் மலை மனதில் உதித்தது. மஹாராஷ்டிராவிலே மிக பெரிய மலை என கருதப்படும் கல்சுபாய் தலத்திற்குச் செல்லலாம் என எண்ணியபடி மதியம் உறங்க சென்றான்.கன்யா அவனை சாயங்காலம் வந்து எழுப்பியதும் தான் நினைத்த கல்சுபாய் மலையை பற்றி அவளிடம் கூற அவள் மிகவும் உற்சாகத்துடன் அங்கேயே செல்லலாம் என உறுதியளிக்க கல்சுபாய் செல்வதற்கு வேண்டியவற்றை அடுத்த வாரமே செய்வதாக கூறினான்.
அடுத்த சில தினங்களில் கல்சுபாய் பற்றிய எல்லா விவரங்களையும் மகாராஷ்டிரா சுற்றுலா மையத்திடம் பெற்று அங்கு தங்குவதற்கான ஏற்பாடையும் செய்தான்.
சங்கமித்ராவின் விடுமுறை அறிவிக்கப்பட்டதும் அவளிடம் தாம் செல்லவிருக்கும் கல்சுபாய்யை பற்றிய விவரங்கள் அனைத்தையும் கூறி ட்ரெக்கிங் செய்ய நல்ல இடமென எடுத்துரைக்க அவளுக்கும் மகிழ்ச்சி.
எல்லோரும் குறிப்பிட்ட தினத்தில் பூனேவில் இருந்து பேருந்தை எடுத்து கல்சுபாய்க்கு பயணம் மேற்கொண்டனர்.
வழியில் அடர்ந்த காடுகளும்,பள்ளத்தாக்குகளும் கண் கொள்ளா காட்சியாக கண் முன் விரிந்தன. மலை பாதையின் பயணம் பயத்தையும் ஒரு வித சங்கடத்தையும் கொடுத்தாலும்,குளிர் காற்று தன் சுகத்தைக் கொடுக்க மறக்கவில்லை. எட்டு மணிநேரப் பயணத்திற்கு பிறகு மெல்ல மூவரும் இறங்கி தங்கள் விடுதிக்கு சென்றனர். பயணக்களைப்பும்,பசியுடன் கூடிய ஒரு சிறிய தலைவலியும் சிறிது எரிச்சலைக் கொடுக்க அதை விடுதியாளர் மீது காட்ட, அவரும் சிறிது சீறிட கன்யாவும், சங்கமித்ராவும் செய்வதறியாது ஒதுங்கி நிற்க, சில நிமிடங்களுக்கு யாவரும் சூடான ஒரு நிலைமையை அடைந்தனர். ஒரு வழியாக அறையின் சாவியை வாங்கி கொண்டு , சந்திரகாந்தன் கன்யாவிடம் சீக்கிரமாக சாப்பிட்டு படுப்போம் என கூறிவிட்டு படிகளில் ஏறி அறையை அடைந்ததும் கோபம் சிறிது தணிய கன்னியாவிடம் அடுத்த நாள் ட்ரெக்கிங் செய்ய இருக்கும் பாதையை பற்றி கூறி அங்கிருக்கும் அம்மனை தரிசனம் செய்ய மக்கள் செல்லும் ஒத்தையடி பாதையையும் விவரிக்க,குழந்தை அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பினாள்.
இருவரும் நாளை நடக்கும் பொழுது அதை யோசிப்போம் என படுக்கச் சென்றனர்.
காலை விடிந்ததும் ட்ரெக்கிங்குக்கு வேண்டிய உடைகளையும் தண்ணீரையும் வழியில் பசி தணிக்க உணவு பொருள்களையும் தோள் பட்டை பையில் சுமந்து கொண்டு புறப்பட ஆயத்தமாகினர்.
சங்கமித்ரா சந்தோஷத்தில் குதித்துக்கொண்டு புறப்பட்டாள். மூவரும் ட்ரெக்கிங் குழுவுடன் சிறிய வண்டியில் சென்று அமர்ந்தனர்.
வண்டி புறப்பட்டு ஒரு மலை அடிவாரம் அடைய யாவரும் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.சங்கமித்ரா தன்னை யொத்த வயதுள்ள குழந்தைகளுடன் பேசிக்கொண்டே முன்னே செல்ல,கன்யாவும்,சந்திரகாந்தனும் குழுவுடன் நடக்க, காலைப் பனியில் முகம் தெரிந்தும் தெரியாமலும் அந்த பயணம் தொடர்ந்தது.
சிறு சிறு பேச்சுக்கள் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள உதவி செய்ய இரண்டு மணிநீராம் போனதே தெரியவில்லை.
கன்னியாதான் முதலில் தன் பையில் இருந்து உணவை எடுத்து ஒரு பாதை ஓரத்தில் இருந்த பாறைமேல் அமர்ந்தாள். சந்திரகாந்த் தன் மகளை அழைத்து குடும்பமாக அந்த பாறையில் கொண்டுவந்த உணவினை உட்கொள்ள தொடங்கினர்.கூட வந்த குழுவில் சிலர் ஆங்காங்கே உட்கார்ந்து அவர்களது பையில் உள்ள உணவினைச் சுவைக்க ஆரம்பித்தனர். முப்பது நிமிடங்களில் எல்லோரும் ஆகாரத்தை முடித்து தண்ணீர் குடித்து மீண்டும் எழ கன்னியாவும் ,சங்கமித்ராவும் எழுந்து சந்திரகாந்தனை நோக்கித் திரும்ப,சந்திரகாந்த் உட்கார்ந்த இடம் காலியாக இருந்தது.
கன்னியா உரக்க அவன் பெயரை கூறி அழைக்க எதிரொலியில் அவன் பெயர் மீண்டும் திரும்ப ஒலித்தது. சங்கமித்ராவும் அவள் தரப்பில் அப்பாவை அழைக்க எல்லோரும் அவர்களுடன் சேர்த்து கொண்டு சந்திரகாந்தனை தேட ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் அங்கு நிலைமை மாறியது எல்லோரும் என்ன ஆகியிருக்கும் என்பதை தங்கள் மனதில் தோன்றியதை கூற,கன்னியாவிற்கு அழுகை பீறிட்டு வந்தது. மகள் அழுகையின் உச்ச நிலையில் கண்ணீர் பொங்க அம்மாவை கட்டி கொண்டு நின்றாள்.
குழுவில் சிலர் கண்ணியவுடன் நிற்க சிலர் தங்கள் பையுடன் சந்திரகாந்தனை தேட விரைந்தனர்.
அங்கு உள்ள மரங்கள் காடாக காட்சியளிக்க அதன் வழி சிலர் சந்திரகாந்தனை அழைத்தவாறு சென்றனர்.
கன்னியா தன் கைபேசியை எடுத்து சந்திரகாந்தனை அழைக்க அது அவள் பக்கத்திலேயே ஒலித்தது. இது இப்படியிருக்க சந்திரகாந்தனை கவனிப்போம்.உணவு பொட்டலத்தைப் பிரித்து முதல் கவளம் உண்டபின் மரங்களின் நடுவே ஒரு ஒளிபோல் தெரிந்ததை கண்டு அதை என்ன என்று தெரிந்துகொள்ள ஆவல் ஏற்பட மெல்ல பாறையிலிருந்து கீழே உட்கார்ந்தான். ஒளி சிறியதாக இருந்தது பெரிதாக வந்து மீண்டும் சிறியதாகி விளையாடியது போல் ஒரு பிரமை , அவனை கவர்ந்து இழுத்தது.சில நிமிடங்கள் உணவு கவளங்களை உட்கொண்டு தண்ணீர் குடித்து பின் நோக்கியபோது ஒளி அணைந்து எரிவதுபோல் தோன்றிட,அது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் அவனை தூண்ட,
சந்திரகாந்த் மெதுவாக ஒளியை நோக்கிச் செல்ல ஆயத்தமாகும் நேரம் கன்னியாவும்,சங்கமித்ராவும் அங்கு கூடியிருந்த குழுவின் மற்ற மக்களுடன் பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களுடைய சந்தோஷத்தை கலைக்க மனம் இல்லாமல் சந்திரகாந்த் அவர்களிடம் கூறாமல் ஒளியை கண்டபின் கைபேசியில் அழைத்து கூறலாம் என்ற எண்ணம் கொண்டு நடந்தான். ஒளி வந்த திசை அடத்தியான மரங்களுக்குப் பின்னால் என்பதால் வெகு வேகமாக தன் நடையை துரிதப்படுத்தினான்.ஒளியை நோக்கி இவன் நடக்க ஒளி நகர்வதுபோல் தோன்றியது,சில நிமிடங்களில் அடைந்து விடலாம் என நினைத்து நடக்க ஆரம்பித்தவன் முப்பது நிமிடங்கள் நடந்த பின்னும் ஒளி இருக்கும் இடத்தை அடையவில்லை. மரங்களின் ஊடே நடந்ததால் எங்கிருந்து நடந்தோம் என்பதும் தெரியவில்லை .மேலும் நடக்கலானான். ஒளி திடீரென மறைந்தது, தன்னை சுற்றிலும் மரங்களும் காற்றில் இலைகளின் சலசலப்பும் சிறிது பயத்தைக் கொடுக்க ,தன காய் பேசியில் கன்னியாவை அழைக்கலாம் என நினைத்து தன் பாக்கட்டில் கை விட கைபேசி இல்லாதது கண்டு கலவரப்பட்டான்.
என்ன செய்வது என மனதை ஒரு நிலை படுத்த நினைக்கையில் மீண்டும் ஒளி தெரிய அவன் அதைநோக்கி நடக்கலானான்.ஒளி மெல்ல நகர்ந்து அவனை அழைத்து சென்றது. காந்தம் இழுப்பதுபோல் தன்னை அந்த ஒளி இழுப்பதை உணர்ந்தான். அவனால் அதிலிருந்து மீள முடியவில்லை. சிறிது நேரம் சென்றது. இருண்ட மேகங்களும் மின்னலும் சேர்த்து மழை வரும் அறிகுறியை தெரிவித்தன. சந்திரகாந்தன் தன் பார்வையை ஒளியிடம் வைத்தபடி முன்னேற ,மழை மெல்ல தொடஙகி அவனை நனைத்தது. பக்கத்தில் ஏதாயினும் இடம் உள்ளதோ என நோக்கினான். மழையின் ஊடே ஒரு சிறிய மண்டபம் தென்பட அதை நோக்கி விரைந்தான்தூண் உள்ள ஒரு சிறிய கட்டிடம் கண்டதும் தனக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்பட, மண்டபம் மீது கால் வைத்தான். பெரிய ஓசையுடன் மின்னலுடன் இடி இடிக்க மனம் திக்கென்றது. பயத்துடன் மண்டபத்தை பார்த்தான், ஒரு மூலையில் பாழடைந்த கோயில் போல் தோன்றியது.ஒரு சிலையும் இருப்பதை கண்டான்.என்ன தெய்வம் என அறியமுடியவில்லை.மழை ஓய்ந்தபாடில்லை. அந்த சிலையை பார்த்துக்கொண்டிருந்த பொழுது மீதும் ஒரு மின்னலும் இடியும் வர சிலையில் இருந்து ஒரு ஒளி வந்து அவனை தாக்கியது.சிறிது நேரம் என்ன நடந்தது என நினைக்க முடியாத ஒரு அனுபவம்.
மழையின் வேகம் குறைய மண்டபம் கோயில் யாவையும் அங்கு இல்லாமல் போனது.
சந்திரகாந்தன் மனதில் கன்னியாவையும்,சங்கமித்ராவையும் நினைக்க ஒரு கண்மூடி திறக்கும் நேரம் அவர்கள் அருகே நின்றான்.
கன்னியாவும்,சங்கமித்ராவும் ஓடிவந்து அவனை கட்டிக்கொள்ள, ஒரு நிமிடம் யாரும் பேசாமல் அழுகையை வெளிபடுத்த, சந்திரகாந்தன் மெல்ல அவர்களிடம் இருந்து விடுபட்டு தான் உட்கார்ந்த பாறையை நோக்கி சென்றான். சந்திரகாந்தன் எவ்வாறு தன் குடும்பத்திடம் திரும்பவந்தான் என்று வியந்தவாறு நினைத்திருக்கையில் அவனை கடந்து செல்லும் சில மனிதர்கள் அவனை திரும்பி நோக்கிட அவர்களை பார்த்து என்ன என்னை பார்க்கிறீர்கள் ஆந்தையைப்போல் என மனதில் நினைக்க பார்த்த மனிதர்கள் ஆந்தையாக மாறினார்கள். சந்திரகாந்தன் திடுக்கிட்டு அவர்களை நோக்கிட ஆந்தையானவர்கள் பறந்து சென்றனர். தன் மனைவியையும் மகளையும் அணைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நடக்கலானான். மீண்டும் ட்ரெக்கிங் வழியில் மூவரும் பயணிக்க, எதிரில் பறவைக்கூட்டம் ஒன்று சத்தத்துடன் பறந்து வந்து கொண்டிருந்தது அது தங்களை நோக்கி வருவதை கண்டு தன் மனதில் இந்த பறவைகளால் எவ்வளவு தொல்லைகள் இவையாவும் பூக்களாக இருந்தால் என எண்ணிட பறவை கூட்டம் வர்ணபூக்களாக மாறி கீழே விழுந்திட ,சந்திரகாந்த் தனக்கு ஏற்பட்டிருக்கும் சக்தியை உணரலானான்.
தான் மனதில் நினைப்பது மூன்று முறை மெய்பிக்கப்பட்டுள்ளது,இனி நல்லதையே நினைக்க வேண்டும் மனதில் உறுதி கொண்டான்.

(தொடரும்)

எழுதியவர் : கே என் ராம் (7-May-18, 4:55 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 122

மேலே