அன்ன வெட்டி

#அன்ன வெட்டி

இத்தனை நாளாக அவன் ஒன்றும் ஒரு பெரிய ஆளாக யாராலும் அறிந்திருக்க வில்லை..அவன் ஒன்னும் அவ்வளவு பிரபலம் இல்லை..ஒரு சாதரணமானவன்..
நடு நிலையானவன்...எது நடந்தால் நமக்கென்ன என்றொரு மன நிலை..சரியாக சொல்ல வேண்டுமென்றால் கிட்டத்தட்ட நாம் எல்லோரும் இந்த கால கட்டத்தில் எப்படி இருக்கிறமோ அது போன்று..


அவன் பெயர் பாஸ்கர்..வயது 23 இல்லை 24 ஆக இருக்கும்.. மருந்தியல் டிப்ளமோ படித்து விட்டு, தன் அப்பா வற்புறுத்தலின் பேரில் ,ஒரு பெரிய தொகை கொடுத்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் வேலை...மாதம் 20 லிருந்து 25 குள்ளாக சம்பளம்...என எந்த கஷ்டமும் தெரியாமல் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது..அவனுக்கு மருத்துவ மனையில் காலை முதல் மதியம் வரை தான் வேலை..மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்து விடுவான்..

அன்று ஏனோ, கொஞ்சம் தாமதம் ஆனது, மதியம் சாப்பிட்டுவதற்கு..."பாஸ்கர், நீயே எடுத்து வைத்து சாப்பிடுப்பா.. மழை வர மாறி இருக்கு நான் போய் மாடில போட்ட துணிய எடுத்துட்டு வந்துர்ரன்..." என்றாள் அம்மா.. இவனும் எடுத்து வைத்து சாப்பிட்டான் இவன் சாப்பிட்டது போல இன்னும் அரை பானை சோறு மீதமிருந்தது... "அம்மா...ஏன்டா...ஏன் இவ்வளவு சோறு மீதம் இருக்கு...நீ இப்போ தாண்டா பாக்குற தினமும் இப்படி தான்"..உங்க அப்பா தினமும் ஒரு குத்தம் கண்டு புடிச்சு சாப்பாடு நல்ல இல்லன்னு பாதியிலே எழுந்துடுவார்..நான் என்ன சாப்பிட போறான்..உனக்கு தான்..

தினமும் இவ்வளவு சோறு வீணாகிறது..என்று வறுத்த பட்டு கொண்டான்...இதனை சரி செய்ய இல்லாதவருக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டு, மீத சாப்பாட்டை ஒரு பாலிதீன் பையில் எடுத்து கொண்டு,கொஞ்சம் இருந்த குழம்பையும் இன்னொரு பையில் கட்டி கொண்டான்..."ரெயின் கோட்டை"...மாட்டிக்கொண்டு தான் நித்தம் மருத்துவ மனைக்கு போகும் வழியில் காணும், ஒரு மூதாட்டியை நோக்கி பைக்கில் பறந்தான்..
"அவளும், சோற்றை பெற்று கொண்டு கை கூப்பினால..
கையை,தன் கையால் அந்த கையை கீழிறக்கி ஒரு புன் முறுவலுடன் திரும்பி நடந்தான்...


இந்த செயல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது..ஒரு வார காலம் ஆகி இருக்கும்..இப்போது சற்று யோசித்து தன் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் இதை பற்றி சொன்னான்.."இப்படி வீணாக கீழே கொட்டும் சோற்றை இன்னொருவருக்கு உணவாக கொடுங்கள்"என்று அனைவரிடமும் சொன்னான் பாஸ்கர்..அனைவருக்கும் இது சரி என பட தினமும் மீதமுள்ள சோற்றை பாஸ்கரிடம் கொடுத்தனர்...இப்போது அந்த மூதாட்டியை போல பல பேர் பசி ஆறினர்.. மேலும், நாட்கள் போக போக இது வாடிக்கையாகவும் ,வழக்கமாகவும் மாறிவிட்டது...

இப்போது பாஸ்கர் அவனுடைய நண்பர்கள் சிலரையும் இதனோடு சேர்த்து கொண்டான்..பெரும்பாலும் ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீதமான சோறு இன்னொருவரின் பசியை போக்கியது.. இது தவிர கல்யாணம், இதர விருந்து உபசரிப்பு போன்ற நிகழ்வுகளில் மீதமான உணவையும் இப்போது பெற்று கொண்டு இல்லாதவர்களிடம் சேர்த்தனர் பாஸ்கர் மற்றும் அவனது நண்பர்கள்...

பாஸ்கர் இப்போது அனைவரிடமும் கவனம் பெற்றான்..சரியாக அவரது குழு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டது..அனைவரும் அவர்களது தின பணி முடிந்ததும் குழுவின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்..மேலும் வாட்ஸப் குரூப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு எந்த இடத்தில் உணவு இருக்கிறதோ அது தெரிவிக்கப்பட்டது, அந்த இடத்திற்கு அருகில் உள்ள பாஸ்கரின் நண்பர்கள் அதை பெற்று கொண்டனர்..மேலும் சரியான நேரத்தில் அதை இல்லாதவர்களிடம் கொண்டும் சேர்த்தனர்..மேலும், சில நேரங்களில் அதிகமான உணவு இருக்கும் பட்சத்தில் அதை முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் போன்றவற்றுக்கும் கொண்டு சேர்த்தனர்..ஆனால், முன்னுரிமை சாலைகளில் இருக்கும் பெரும் பாலனோர்களுக்கு தான்..

சில நேரங்களில் அவர்களுக்காக வேண்டி உணவு சுட சுட சமைத்து வழங்கப்பட்டது...பாஸ்கருடன் உள்ளவர்கள் பெரும்பாலும் படித்த இளைஞர்களே,அனைவரும் சேர்ந்து அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியில் ஒரு ஆட்டோ வை வாங்கினர்..அது அதிக அளவு உணவை எடுத்து செல்ல ஏதுவாக இருந்தது..மேலும் பக்கத்து ஊர்களில் இருந்தும் உணவை கொண்டு வர ஏதுவாக இருந்தது..
இப்போது அந்த பகுதியில் யாரும் பசியால் வாடவில்லை.
பாஸ்கர் மற்றும் அவனது நண்பர்களினால்..

பாஸ்கர் நெடுநாள் களித்து அவனின் நண்பர்களின் வேண்டு கோலினால் ஒரு பெயரை இட்டான் இந்த குழுவிற்கு.."அன்ன வெட்டி"...பாஸ்கர் என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவானது.. அவனுடைய நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், கூட வேலை செய்பவர்கள் அவனை பார்த்து பெருமிதம் கொண்டனர்..."புள்ளனா எப்படி இருக்கும்னு பாஸ்கர் தம்பிய பார்த்து கத்துக்கோடா"..என சில அப்பாக்கள் தங்களது மகன்களை திட்டுவது ஆங்காங்கே காதில் விழுந்தது...

(குறிப்பு- அன்னவெட்டி என்பது சோற்றை எடுக்க உதவும் ஒரு உபகரணம்)

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (16-May-18, 9:06 am)
Tanglish : anna vetti
பார்வை : 141
மேலே