பிரிவினும் சுடுமோ பெருங் காடு

நான் காட்டுக்குப் போகனும், அங்க கல்லிருக்கும் முள்ளிருக்கும். குத்தும், நீ தாங்க மாட்ட, இங்க இருந்துக்கோ எனச் சொன்னவனிடம் சீதை சொல்வாள்;

பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது
ஒருவு கின்றவனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டுடையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங் காடென்றாள்

சீர் பிரித்தால்…

பரிவு இகந்த – இரக்கம் இல்லாத
பற்றில்லாது- விருப்பம் இல்லாது
ஒருவு கின்றவனை – போகிறவனை
ஊழி – அழிவு
அருக்கன் – சூரியன்
யாண்டுடையது – எத்தன்மையானது
ஈண்டு – இங்கு
பிரிவினும் சுடுமோ – உன் பிரிவை விட சுடுமோ
பெருங்காடென்றாள் – நீ போவதாகச் சொல்கிற பெருங்காடு!

பெரும் ஊழியில் சூரியன் சுடுவதா பிரச்சினை எனக் கேட்கிறாள் ஜானகி. நானும் வருவேன் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறாள். போகிறார்கள்; இராவணன் தூக்கிறான். அப்புறம் யுத்த காண்டம். ராமன் சொன்னதைக் கேட்டு பேசாம வீட்டோட இருந்திருந்தா, ஒரு பெரிய யுத்தத்தைத் தடுத்திருக்கலாம், அது வேறு விசயம்.
ஆனால், இங்கே கவனிக் வேண்டியது கம்பனின் உவமான உவமேயங்களைத்தான். கம்பராமாயணம் முழுக்க பரவிக்கிடக்கிற இந்த உவமான உவமேயங்களை யாரேனும் தொகுத்திருக்கிறார்களா?

ஜனகனின் மகள் ‘ராமன் இருக்கும் இடம்தான் எனக்கு அயோத்தி’ எனக் கூடவே புறப்பட்டாள். நமக்கு வாய்க்கிறதுகள், நம்மள தனியே வச்சிட்டு ஊர் சுத்த போகிதுகள். கொடுமடா!
This entry was posted in இலக்கியம்,---- கம்பராமாயணம் by உமையாழ்.

எழுதியவர் : (16-May-18, 4:48 am)
பார்வை : 111
மேலே