கேரள_காணிக்கை

#கேரள_காணிக்கை
அப்போது தான் அங்கு முதன் முறையாக செல்கிறான்..எண்ணற்ற கனவுகள் அவனிடம், அது எல்லாவற்றையும் நிறைவேற்றும் இடம் அது.. சிலர், அங்கே போய் வாழ்வில் வென்றும் இருக்கிரார்கள்.. பலர் வீழ்ந்தும் இருக்கிறார்கள்.. நானும் அந்த வென்றவரின் வரிசையில் சேர வேண்டும் என்று எண்ணி தனது முதல் பயணத்தை கேரளா நோக்கி பயணித்தான் ராம்..

ராம்,பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதும் படிக்கவில்லை.. படிக்கும் பையன் தான்... படிக்கும் வயதில் ஏற்பட்ட மாற்றம்,அப்பாவின் மரணம்.. அதனோடு ஒரு கூடுதல் சிறப்பாக அவர் வாங்கிய கடன்.. சினிமாவில் வருவது போல எவரேனும் வந்து சட்டி,சாமான்களை தூக்கி எறிய வில்லை.. கொலை மிரட்டல் செய்ய வில்லை.. இருந்தாலும் வாங்கிய கடனை திரும்ப அடைக்க தானே வேண்டும்..

என்று,எண்ணி அன்று முதல் இன்று வரை கடனை அடைக்க போராடி கொண்டு இருக்கிறான் ராம்.. அப்படி கஷ்டப்படும் போது தான்.. ராமுக்கு கிடைத்தது இந்த கேரள வேலை வாய்ப்பு... சில நண்பர்கள் ஊர் பெரியவர்கள் கொஞ்சம் உசுப்பி விட.. ராமுக்கு கேரள நாட்டின் மீது கொஞ்சம் மோகம் அதிகம் வந்துவிட..


டேய், அங்க போய் வேல பாத்தா காசும் கொஞ்சம் அதிகம் கிடைக்கும், உன் வயித்தையும் பாத்துக்கலாம்... உன் கடனையும் அடைச்சிடுலாம்.. இங்கேயே 100, 200 னு எவ்ளோ நாள் போராடிட்டு இருப்ப... கொஞ்சம் வெளியே போ நல்லா சம்பாரி... பிறகு ஊருக்கு வா உன் அம்மாவை நல்லா பாத்துக்கலாம்.. பிறகு என்ன என்று இழுத்த பெரியவர்... உன்ன பாத்துக்கவும் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் முடிச்சிகோ என்று புன்முறுவலுடன் சொன்னார்... அந்த பெரியவர்...

இந்த செய்திகள் எல்லாம் ராமை ஊக்க படுத்த , அம்மாவிடம் சொல்ல தயங்கி ஒரு வழியாக சொல்லி... அம்மா "வேண்டாம்... பா.... கஞ்சியோ... கீரயோ... இங்கேயே இருப்பா... அம்மா கூடவே இருந்துட்டு...போ.. இவ்வளவு நாள் நமக்கு குடுத்த இறைவன் கொடுக்காமலா போய்டுவான்... " என்று அம்மா சொன்னதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமல்... மாலை எர்ணாகுளம் எஸ்பிரேஸ் ட்ரெயின்.. அந்தி ல ஏறி.... விடியற்காலையில ஏறங்குனான்... ராமும் அவன் நண்பன் ரமேஷும்....

ஊர் காரர், ஒருவர் கொடுத்த விலாசத்தை ஆராய்ந்து பார்த்து, தட்டு தடுமாறி ஒரு வழியாக அந்த இடத்திற்கு சென்று விட்டனர்... அது ஒரு பெரிய மில்.. முதலாளி நிதின் மேனன்... பார்க்க நல்லவராகவே தெரிந்தார்.. நித்தம் அவரிடம் அறிமுகம் ஆகி, ஊர் காரர் ஒருவர் சிபாரிசையும் சொல்லி வேலையில் சேர்ந்தனர்.. அவர்களுடைய வேலை காபிகோட்டை, தேயிலை போன்றவற்றை அந்த பெரிய மில்லில் அரைப்பது மற்றும் அதனை சுத்தம் செய்வது... ஆட்கள் கொஞ்சம் சொல்லி கொடுக்க ராமும், ரமேஷும் நன்றாகவே அதை பற்றி தெரிந்து கொண்டு நன்றாக வேலை செய்தனர்...

இவர்கள்... நல்ல வேலை செய்ய முதலாளிக்கும் இவர்களுக்குமான நெருக்கம்..கொஞ்சம் அதிகமானது.. இப்படி, நன்றாகவே வாழ்க்கை போய் கொண்டு இருந்தது.. ராம் இவ்வளவு நாள் கண்ட கனவு விரைவில் நனவாகும் என்று
எண்ணி நாட்களை ஒட்டி கொண்டு இருந்தான்..

அவ்வப்போது, அம்மாவிற்கு போனும் செய்தான்... ராம்... விரைவில் ஊருக்கு வந்து போவதாகவும் தெரிவித்தான்..ராம்..
ஒரு நாள்... புதிதாக.. காபி கோட்டை அரைக்க மிஷின் பம்பாயில் இருந்து வாங்கி கொண்டு வந்து அவர்கள் ஆலையில் பொறுத்தும் பணியில் ஈடு பட்டு கொண்டு இருந்தனர்..

ராமுவுக்கும், ரமேஷுக்கும் அன்று நிறைய வேலை.. தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தனர்.. ஒரு வழியாக வேலை முடிய முதலாளி நிதின் பார்த்துவிட்டு ராமுவையும், ரமேஷையும் பாராட்டினர்..

இங்க... பாருங்கடா... நாளைக்கு நல்ல நாள் இந்த மிஷின் ல பூஜை பண்ணிட்டு வேலையை ஆரம்பிப்போம்.. அடுத்த நாள் "பூஜை முடிய நிதின் ராமுவிடம்..இங்க பாரு ராம் இந்த பம்பாய் பசங்க எங்க..? அவங்கள, மிஷின் உள்ள போய் அந்த பிளேடு, ஹூட் கிட்ட நல்லாஹ் துடைக்க சொல்லு.." ஐயா... புது மிஷின் தானே.. நல்லாஹ் தானே இருக்கும்... இல்ல ராம் நம்ம பிரடாக்ட் எல்லாம் ஏ 1 குவாலிட்டி யாக இருக்க வேணாமா...? அதை எங்க எந்த இடத்திலோ தயரிச்சானோ..? அவங்கல ஒரு பையன் ஆஹ் விட்டு நல்லாஹ் கிளீன் பண்ணிட்டு... என்ன வந்து பாரு..


ராம்.. அந்த பம்பாய் பசங்களை தேடினான்.. அவர்கள் அனைவரும் சாப்பிட சென்று விட்டனர்.. வேலை முடிய வேண்டும் என்று ராமே உள்ளே இறங்கி சுத்தம் செய்து கொண்டு இருந்தான்.. அப்போது எதிர் பாராமல் முதலாளி நிதின் அந்த மிஷினை ஆன் செய்தார்... ராம் கத்தினான்.. நான் உள்ளே இருக்கேன்.. ஆப் பண்ணுங்க.. என்று... எல்லோரும் அப்போது சாப்பிட போய் விட்டதால்... அங்கு அவன் கத்தும் சத்தம் யாருக்கும் கேக்க வில்லை... அந்த பலபளுக்கும் புதிய ப்ளடுகள் ராமுவை சீவி சிதறியது... அந்த இடம், மிஷின் முழுவதும் ரத்தம் வழிந்தோடியது..

அங்கு கூட்டம் கூட , முதலாளி நித்தின், ஒன்றும் அறியாதவனை போல அங்கு வந்து பார்த்தார்... அது ராமு என்பதை அறிந்து கொண்டு கொஞ்சம் பதறினார்..
ரமேஷ்... ரத்த ஆற்றில் மிதக்கும் ராமுவை நெஞ்சோடு சேர்த்து வைத்து அழுது கொண்டு இருந்தான்.. முதலாளி நித்தின் குற்ற உணர்ச்சியில் துடித்துடித்தார்..


பின்னர், ராமுவின் அம்மாவிற்கு தகவல் சொல்லப்பட்டது.. ராமுவின் உடலை கொண்டு வந்தாள் அவள் சும்மா இருக்க மாட்டாள்.. ஏதாவது செய்து கொண்டாள் என்ன செய்ய என்று... ஊர் பெரியவர்கள் ஒரு சேர முடிவெடுத்து அவனின் உடலை அங்கேயே புதைத்தனர்...


எல்லாம் முடிந்து ஒரு வார காலம் இருக்கும், ரமேஷ் ஊருக்கு கிளம்ப ஆயத்தம் ஆகி கொண்டு இருந்தான்.. முதலாளி நிதின்... ரமேஷிடம்...இங்க பாருப்பா... இதுல 10 லட்சம் பணம் இருக்கு இதை ராமு அம்மாகிட்ட ஒப்படச்சிடு... எதுக்கு சார் இது.. ஏதோ கெட்ட நேரம் அவன் உள்ள இருக்கும் போது யாரோ தெரியாம மிஷின் ஆஹ் போட்டுடாங்க..

அய்யோ... இல்ல ரமேஷ் அந்த மிஷின் ஆஹ் போட்டது நான் தான்... ரமேஷ் வியப்படைந்தான்.. எனக்கு தெரிஞ்ச மலையாள மாந்திரீகர் ஒருத்தர்... புது மிஷின் ல ரத்த காணிக்கையோட துவங்குனா... நல்ல லாபம் வரும்னு யார் கண்ணும் படமா ஓஹோ னு வாழலாம்னு சொன்னார்... அதான் அப்படி பண்ணிட்டேன்...

சத்தியமா... உள்ள ராம் தா இருக்கானு எனக்கு தெரியாது தெரிஞ்சா போட்டு இருக்க மாட்டேன்.. நா அவனை பம்பாய் பசங்கள தான் இறக்க சொன்னான்.. இவன் போனது எனக்கு தெரியாது... என்ன மன்னிச்சுடு ரமேஷ் இதை வாங்கிக்கோ..

சார்... நிறுத்துங்க உங்க மேல நிறைய மரியாதை வச்சு இருந்தேன்... அதெல்லாம் இப்போ மறஞ்சிடுச்சு... ராம் இல்ல பம்பாய் பசங்க உயிரனாலும் உங்களுக்கு துச்சமா.. நீங்க உங்க தலைமுறையை நல்லாஹ் வச்சிக்க அடுத்தவன் வம்சயத்தை அளிச்சிட்டீங்களே... சார்...போதும் சார் உங்க ஊரும்,காசும்... நான் எங்க ஊர்ல பட்னியா கிடந்தா கூட ராஜாவா தான் இருப்பன்.. இந்தாங்க பிடிங்க உங்க பணம்.. ஆனால், நீங்க செய்த பாவத்துக்கு கடவுள் கண்டிப்பா பதில் கொடுப்பார்... ஒன்னும் நீங்க பயப்பட வேண்டாம்... சார்.... நாங்க கேஸ் லாம் போட மாட்டோம்...போட்ட நீங்க பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்து விடுங்க... நீங்க நல்லாஹ் இருங்க இனிமேலாயவது மந்திரவாதி சொல்றான்..மாந்த்ரீகன் சொல்றான்னு எவன் உயிரையும் எடுத்துடாதிங்க...

என்று,ரமேஷ் கூறிவிட்டு தனது ஊர் நோக்கி பயணப்பட்டான்..

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (22-Dec-18, 9:50 pm)
சேர்த்தது : Mohamed Mufariz
பார்வை : 379

மேலே