கடவுள்

#கடவுள்
கடிகாரம் கூட அவ்வப்போது, பேட்டரி தீர்ந்து போனால் ஓய்வு எடுத்துக்கொள்கிறது.. ஆனால், எல்லோரும் கூறுகிறார்கள்..கடிகாரம் ஓய்வில்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறது என்று..அது தவறான ஒன்று அதற்கு எடுத்துக்காட்டு நான் தான் என நினைத்துக்கொண்டு 15பி பஸ்ஸில் தான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தும் இறங்காமல் ஒரு ஆழ்ந்த சிந்தனையில் பயணித்து கொண்டு இருந்தாள்..ரம்யா..


ரம்யா.. அவளைப்பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு மனைவி,இரண்டு பிள்ளைகளுக்கு தாய்,மருமகள் போதாத குறைக்கு ஒரு நாத்தனார் போஸ்டும்,இது போக ஒரு மகளிர் சுய உதவி குழுவின் தலைவி வேறு..அவ்வப்போது மாதாந்திர கூட்டங்கள்.. தீர்மானங்கள் எல்லாம் எடுப்பதில் ரம்யாவுக்கு நிகர் ரம்யாவே..

இவள் இப்படி அவ்வப்போது மகளிர் சுய உதவி குழு பணிக்காக வெளியில் செல்வது கணவன் அசோக்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை..சரி, ஒரு வருடம் தான இருந்துட்டு போகட்டும் என்று விட்டு விட்டான்.. அசோக்...

இன்றுடன் ஒரு வருடம் நிறைவுற்றது, கணவன் அசோக்.. "என்ன? ரம்யா குழு ஒர்க் லாம் முடிஞ்சதா..? இனிமே நீ ஃபிரியா இருக்கலாம்..உனக்கு எவ்ளோ கஷ்டம்...இனிமேல், நீ ஜாலியா இருக்கலாம்.." இல்லைங்க... நாங்க சுய உதவிக்குழுவ தொடர்ந்து..நடத்த போறோம்... இரண்டு வருஷம் இருந்தாதான் பேங்க் ல லோன் தருவாங்களாம்..பிறகு லோன் வாங்கி நாங்க சுய தொழில் பண்ணி முன்னேற போறோம்...

இதை கேட்டு கொண்டு இருந்த அசோக் "தன் கையில் இருந்த காஃபி டம்ளரை தூர வீசி விட்டு, ஏதோ பண்ணி தொலை".. என கூறி விட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்..ரம்யா அதை சுத்தம் செய்து விட்டு வருவதற்குள் அசோக் ஆபிசுக்கு கிளம்பியாச்சு...டிபன் சாப்பிடவில்லை.. லன்ச்சையும் எடுத்து போகவில்லை.. இது எல்லாம் போக,ரம்யாவுக்கு நேரம் ஆகிவிட்டது..இன்று குழு விஷயமாக பேங்க் மேனேஜரை பார்க்க...இதை எல்லாம் யோசித்துவிட்டு வந்ததால் தான் அவளால் குறிப்பிட்ட ஸ்டாப்பில் இறங்க முடியவில்லை..


அய்யோ...விதியே என நினைத்துக்கொண்டு மறுபுறம் பஸ் ஸ்டாப்பில் அடுத்த பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தாள்...ரம்யா...ஒரு கால் மணி நேரம் சென்று இருக்கும் எந்த பேருந்தும் வர வில்லை..அப்போது ஒரு கருப்பு நிற ஸ்கோடா...கார் அந்த பேருந்து நிறுத்தத்தை..ஒட்டி நின்றது...கண்ணாடி இரக்கப்பட்டு "மேடம், இங்க யூகோ பேங்க்கு எப்படி போகணும்".. என்று கேட்டாள் ஒரு பெண்மணி.. ரம்யா... "இஃப் யூ டோன்ட் மைண்ட் ...நானும் அங்க தான் போறேன்..என்ன கொஞ்சம் பிக் பண்ணிக்கிறீங்களா".. "ஓஹ்..சுயர் மேடம் எறிக்கோங்க"...


உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..என்று அந்த ஸ்கோடா பெண்மணி ரம்யாவிடம் வினவினாள்..ஆமாம்..உங்களையும் எங்கயோ பார்த்த மாதிரி தான்..இருக்கு..
"நீங்க ஜயின் காலேஜ் ஆஹ். ஆமாங்க..நீங்க" என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் ரம்யா...


ஆமா, நானும் அந்த காலேஜ் தான் உங்க பேரு, என் பேர் வித்யா..பி.ஏ இங்கிலிஷ் அப்படியா... ஹேய், வித்யாக்கா நான் உங்க ஜூனியர் நான் உங்க ஹாக்கி டீம் ல இருந்தன..நியாபகம் இல்லையா... ஏய், கோல் கீப்பர் ரம்யா வா நீ... ஆளே அடையாளம் தெரியல.. என்னடி முன்னடி இருந்த ஹேர் கர்லிங் லாம் காணோம்.. ஏன் அக்கா நீங்க வேற காலேஜ் முடிச்சதும் மாஸ்டர் பண்ண போறேன்னு சொன்னேன்.. அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..


எல்லாம் விதிக்கா என்ன இப்படி ஆக்கிடுச்சு... என்ன சொல்லி என்ன செய்ய ஒரு 4 வருஷத்துல என் வாழ்க்கையே இப்படி மாறிபோச்சு.. என் கனவு எல்லாம் சிதஞ்சு போச்சு..என் வீட்டை பொறுத்த வரைக்கும் நான் சம்பளம் வாங்காத வேலையாள்.. என கல்யாணத்தில் ஆரம்பித்து காலையில் கணவன் வீசிய காபி வரைக்கும் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தால் ரம்யா..

வித்யாவும் இவள் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டு காரை மெதுவாக ஒட்டி சென்றாள்.. சரி அக்கா என் கதையை விடுங்க.. அது மெகா சீரியல் மாரி போய்ட்டே இருக்கும்.. நீங்க சொல்லுங்க..நீங்க எப்படி இருக்கீங்க.. ?இப்ப என்ன பண்றிங்க...? உங்க கணவர் என்ன வேலை பார்க்கிறார்...? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்...? என கேள்விகளை அடுக்கி கொண்டே போனால்.. இதை எல்லாம் கேட்ட ரம்யாவிற்கு... வித்யாவின் கண்ணீர் மட்டுமே பதிலாய் வந்தது...



ஏன் அக்கா அழுகுறிங்க.. நான் ஏதாவது தப்பா கேட்டுடனா..? இல்ல ரம்யா..ஒன்னும் இல்ல என்று காரை ஒரு ஓரமாக நிறுத்தினாள்... வித்யா... பிறகு.. ரம்யா ஒரு நல்ல கணவர், குழந்தைகள் கிடைக்கிறது எவ்ளோ பெரிய வரம் தெரியுமா..?அது கடவுள் எல்லாருக்கும் தந்துறது இல்ல..நானும் உண்ண போல தான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு பிடிவாதம் பண்ணேன்..உன் விதி மாதிரி என் விதியும் மாரிச்சு...

ஆனால்,இந்த விதில எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு..ஆனால், கடவுள் குழந்தை என்னும் விதியை எனக்கு விதிக்காம போயிட்டாரு ரம்யா..
இதனால வீட்ல எப்போவும் பிரச்சனை.. என் அத்தை என்னை பேசாத நாளே இல்லை.. இது எல்லாத்தையும் என் கணவருக்காக நான் பொறுத்துக்குட்டு இருந்தேன் ரம்யா... ஆனால்,ஒரு நாள் என்று சொல்ல தயங்கி அழுதாள்.. தொண்டை அப்படியே அழுகையால் அடைத்தது.. கண்கள் கோவப்பழமாக சிவந்தது.. செய்வதறியாது ரம்யா..தண்ணீர் பாடில்லை திறந்து வித்யாவிடம் கொடுத்தாள்..

வித்யா...தண்ணீர் குடித்து விட்டு கொஞ்சம் நிதானமானாள்.. "யாருக்காக...இவ்வளவு நாள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இருந்தானோ"... அவரே வந்து... வித்யா நான் ஒன்னு சொல்றேன்.. அதான் இப்ப உள்ள சூழ்நிலைக்கு சரியாக வரும்..பேசாம எனக்கு டிவர்ஸ் கொடுத்துட்டு போய்டு.. வாரிசு இல்லாம என் தலைமுறை இருக்க கூடாது...நீ படிச்சவ புரிஞ்சிப்பனு நினைக்கிறேன்... அதுவும்,இல்லாம என் அம்மாகிட்ட தினமும் பேச்சு வாங்க முடியல.. ஓகே வா..

அன்றே, நான் ரொம்ப இடிந்து போய்ட்டேன்..ரம்யா..கல்யாணம் ஆகி மூணு வருஷத்துல டிவர்ஸ்..என் அப்பா அம்மா இன்னொரு திருமணம் பண்ணிக்க சொன்னங்கா...அவனும் டிவர்ஸ் கேட்டா என்ன பண்றது சொல்லிட்டு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேன்..இன்னைக்கு வரைக்கும் அவங்களுக்காக தான் நான் வாழுறேன்..


ரம்யா.. எப்போதும் கடவுள் எல்லாருக்கும் எல்லாத்தையும் தந்து விடுவது கிடையாது.. நீ வாழ்க்கையே புரிஞ்சிக்கோ.. அதுக்காக உண்ண நான் அடிமையாக லாம் இருக்க சொல்லுல..
வீடு என்கிற கோவிலுள்ள மனைவி தான் கடவுள்.. வர இன்பம்,துன்பம் எல்லாத்தையும் தாங்கி கொள்ளனும், வீட்டில் உள்ளவர்கள் தினமும் செய்யும் தவறை மன்னிக்கணும்.. அவர்கள் வேண்டுவதை நீ நிறைவேற்றணும்... அவர்கள் கேட்பதற்கு தகுந்தாற்போல் அப்பப்போ கொஞ்சமா காணிக்கையும் வாங்கிக்கோ... என்று கொஞ்சம் சிரித்து கொண்டே சொன்னாள் வித்யா...


எப்படியோ... துன்பத்தில் திளைத்த உரையாடல் இன்பத்தில் முடிய... ரம்யா கொஞ்சம் தெளிவுற்றாள்... வித்யா..காரை ஸ்டார்ட் செய்ய... வித்யாக்கா என்ன அந்த பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்ணிடிங்க.. "ஏன்...டி...? பேங்க் கு போகணும்னு சொன்ன... இல்லக்கா அது தேவை இல்லை.. ஒகே ஆல் தி பெஸ்ட்... இது என்னோட விசிட்டிங் கார்ட்.. கோல் கீப்பிங் ல பால மிஸ் பண்ற மாதிரி இதை மிஸ் பண்ணிடாத என சிரித்துக்கொண்டே விடை பெற்றாள்... வித்யா...

ரம்யா... உடனே... தன் போனில் இருந்து தான் கணவனை அழைத்தாள்... எடுத்தவன்.. ரம்யா... என்ன மன்னிச்சிக்கோ மா... ஏதோ டென்ஷன் ல பண்ணிட்டேன்.. நீ உனக்கு எது புடிக்கமோ அதே செய்... நானும் எல்லா ஆண் போலவும் நடந்துகிட்டேன்.. என்ன மன்னித்துடு ரம்யா...

இல்லைங்க.... இனிமே நம்ம வீட்டிலே எனக்கு பிடிச்சது எதுமே இல்லவே இல்லை.. இனிமேல், நமக்கும், நம்ம பிள்ளைகளுக்கு புடிச்சது மட்டும் தாங்க..

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (5-Dec-18, 7:41 pm)
சேர்த்தது : Mohamed Mufariz
Tanglish : kadavul
பார்வை : 751

மேலே