அது ஒரு மழைக்காலம்
அது_ஒரு_மழைக்காலம்
"காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மன்னார்வளைகுடா பகுதியில் நிலை கொண்டு உள்ளதால்,இன்னும் ஒரிரு நாட்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது"...என்று தான் வைத்துதிருந்த ட்ரான்சிஸ்டரில் காலை செய்தி கேட்டுக்கொண்டு இருந்தார் தாத்தா..
அவர் ஒரு பழைய பஞ்சாங்கம்,21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ,ஆதி மனிதர்,ட்ரான்சிஸ்டர்க்கு பதில்,ரேடியோ,செல்போன்,டி.வி என பல வந்தும் இன்னும் அதே ட்ரான்சிஸ்டர் தான்..ஒரு லேண்ட் லைன் போன் உள்ளது அந்த ஊரிலேயே முதல் போன் இவர் வாங்கியது தான்..பார்த்த நாள் வரையில் அந்த பெரிய(பழைய)வீட்டில் தனி மரமாய் வாசலில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து இருப்பார். பிள்ளைகுட்டிகள் இல்லை,மனைவி இல்லை,தாய் இல்லை தனி மரம் அவர் (தாத்தா) வயது 70 மதிக்கத்தக்க...தினமும் காலையில் ட்ரான்சிஸ்டர் காதின் அருகில் வைத்து கொண்டு வாசலில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்ப்பது தான் அவரின் ஒரே ஒரு பொழுது போக்கு..
"சீக்கிரம்,வாடி எவ்ளோ நேரம், தினமும் இதே ரோதன ஒன்னோட;எனக்குன்னு வந்து வாய்க்கிது பாரு..என்று கத்தினான் கணவன்..''இதோ வரங்க வர வேணாம் நீங்க பாட்டுக்கும் கத்துறீங்க''என்றால் கோபத்துடன் மனைவி..இதனை கவனித்து கொண்டியிருந்த தாத்தா, "ஏன் பா கோவிக்கிற மாசமா(நிறைமாத கர்ப்பிணி)இருக்கிற பொண்ணு";யோ,உன் வேலையை பாரு,எல்லாம் வந்துருவாங்க, என்றான் கோபத்துடன் கணவன்,மனைவி சும்மா இருங்க வயசுல பெரியவர் அவரை போய் என்று அதட்டினால்..சிறிய புன்முறுவல் காட்டிவிட்டு கணவனும்,மனைவியும் அலுவலகம் சென்றனர்..அப்போதே வானம் இருட்டி இருந்தது.. அவர்கள் போய் சேரும் போதே மழையில் நனைந்து இருப்பார்கள் என தாத்தா வருந்தினார்..
இந்த தெருவில் இருக்கும் அனைவரையும் விட இந்த கணவன்,மனைவியின் மீது தாத்தா விற்கு கொஞ்சம் பாசம் அதிகம்.. தமக்கென்று ஒரு மகனோ,மகளோ இருந்திருந்தால் இந்நேரம் இப்படி தான் இருந்துருப்பாங்க..என்று,நினைத்து கொள்வார்.. மழை அதிகமாக பெய்ய தொடங்கியது..சாலையெங்கும் நீர் தேங்க ஆரம்பித்தது..
சிறுது,நேரத்தில் தாத்தா அந்த மழையில் சென்று தனக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே வாங்கி வைத்து கொண்டார்..நாளை மழை அதிகமானால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாங்கி வைத்துக்கொண்டார்..
மணி மாலை 6 மணியானது மழையின் அளவு அதிகரித்து கொண்டே இருந்தது..மழை நீர் வீட்டு (தாத்தா) வாசலின் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தது..இதை கவனித்த தாத்தா இனிமேல்,சரி வராது என முக்கியமான ஆவணங்கள் சாப்பிட தேவையான பொருட்கள் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ்,கொஞ்சம் சமையல் பாத்திரங்கள் கடையில் வாங்கிய தோசை மாவு போன்றவற்றை ஒவ்வொன்றாக மாடியில் சேர்த்தார்,முழங்கால் வலியால் இத்தனை நாள் மாடி புழக்கமே இல்லை,மாடியில் இருந்தவற்றை சுத்தம் செய்து விட்டு,ஒரு பெரிய வாங்கு (பெஞ்சு) சுத்தம் செய்து தான் உறங்குவதற்காக ஏற்பாடு செய்தார்..அப்படி,இப்படினு எல்லா வேலைகளையும் செய்து முடிக்க மணி 9 ஆயிற்று..
சொப்பாடா எல்லா வேலையும் முடிஞ்சு,என்று பெருமூச்சி விடுவதற்குள் பவர் ஆப் ஆயிற்று,நல்ல வேலை எல்லா வேலையும் முடிஞ்சவோண கரண்ட் போச்சே என்று சிறு ஆறுதல் பெற்றுக்கொண்டார்...
மெழுகுவர்த்தி ஒன்றை எதிவைத்து விட்டு,ஒரு வாழைப்பழத்தோடு தன் இரவு உணவை முடித்துக்கொண்டார், தூங்கும் முன் ட்ரான்சிஸ்டரில் பாட்டு கேட்பது வழக்கம் அப்படியே பெஞ்சில் படுத்தார் தாத்தா..
படுத்த சிறுது நேரத்தில் வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டது,இந்த மழைல அதுவும் இந்த நேரத்துல யாரு, நல்ல நாளிலேயே நம்மல பாக்க யாரும் வரமாட்டா இந்த நேரத்துல யாரு,என்று கையில் மெழுகுவர்த்தியை ஏந்திகொண்டு வாசற்கதவை நோக்கி சென்றார். முழங்கால் வலியால் தட்டு தடுமாறி படி இறங்கினார்..ஒரு வழியாக கதவை யாருப்பா இந்த நேரத்துல என்ற கேள்வியுடன் திறந்தார்..நாங்க தான் தாத்தா என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்டது, மெழுகு வர்த்தியை சற்றே உயர்த்தி முகத்தை பார்த்தார்,எதிர்த்தவீட்டு கணவன், மனைவி,அவள் எப்போதும்போல் புன்முறுவல் செய்தால், அவனும் எப்போதும் போல் உர்ரென்று இஞ்சி தின்ற குரங்கை போல் இருந்தான்..
"அப்பா,எங்க வீட்டுபுல்லா தண்ணி முழங்கால் வரைக்கும் இருக்கு, கொஞ்ச நேரத்துல இன்னும் அதிகமா ஆயிடும் போல,எனக்கு பயமா இருக்கு,டாக்ஸிக்கு போன் பண்ணாலும் எடுக்க மாற்றங்க.அதான் வெளிய வந்து பாத்தோம் உங்க வீட்டு மாடில வெளிச்சம் தெரிஞ்சுச்சு,அதான், நாம இங்க போய் தங்கலாம்னு வந்தோம்,"நாங்க இங்க தங்கலாமா நாளைக்கு காலைல போய்டுறோம்";என்று கேட்டாள், இவள் இவ்வளவு பேசியும்,அவன் எதுவும் பேசாது முரச்ச படியே நின்றான்..
என்னமா, இப்படி கேக்குற தங்கிக்கிங்க மா,இது உன் வீடு மாறிமா என்றார் தாத்தா..இருவரும் படி ஏறி மாடிக்கு செல்ல கதவை பூட்டிவிட்டு தாத்தா அவர்களை பின் தொடர்ந்தார்..தாத்தா அவர்களை பார்த்து சாப்டிங்களா என்றார்,இல்ல அப்பா எல்லாம் தண்ணில போயிடுச்சு,என்னமா மாசமா இருக்குற பொண்ணு காலத்துல சாப்பிடவேணாம, அங்க ஸ்டவ் இருக்கு தோசை மாவு இருக்கு போய் ரெடி பண்ணி சாப்பிடுமா,என்றார் தாத்தா..சிறுது நேரத்தில் தோசைசுட்டு கணவக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டால்,அப்பா ,நீங்க சாப்டிங்களா என்றாள் அவள்(மனைவி).."நான் சாப்பிடமா";என்றார் தாத்தா ..இருந்தாலும் இரண்டு தோசை சுட்டு கொடுத்தால் அவள்..சிறிது நேரம் செல்ல மூவரும் உறங்க தயாரானார்,அவள் நிறைமாத கர்ப்பிணி என்பதால் ,கீழே படுபத்தில் சிரமப்பட்டால்,,நீ மேலே படுமா நான் பாய் ல படுத்துக்கிறேன்,என்றார் தாத்தா..அவள் மேலே படுக்க அவனும் தாத்தாவும் கீழே படுத்தனர்.. அவனின் முரச்ச முகம் மாறவில்லை..தாத்தா அவனின் முகத்தை பார்க்காமல் மறுபக்கம் திரும்பி படுத்தார்..கடுமையான வேலை பழுவால் தாத்தா உறங்கினார், மழை பேய் மழையாய் அடித்து நொறுக்கியது,நீரின் மட்டம் சாலைகளில் உயர்ந்து கொண்டே இருந்தது..நல்ல அயர்ந்த தூக்கம் தாத்தாவிற்கு, அதிகாலை 1 மணி இருக்கும்,சலசலப்பு அழுகை சத்தம் கேக்கவே தாத்தா திடுக்கிட்டு எழுந்தார்.பிரசவ வலியால் துடித்தாள் அவள்,கணவன் அருகில் அவளை தாங்கிபிடித்தவாறு நின்றான்,என்ன என்னாச்சு என்று பதத்துடன் கேட்டார் தாத்தா,இந்த மாசம் 20 ம் தேதி தான் டேட் குடுத்துருக்காங்க,இவளுக்கு இப்பவே வலி வந்துட்டுஎன்றான் கணவன்..அவன் செய்வதறியாது நின்றான். தாத்தா உடனே நீ ஆம்புலன்ஸ் கு போன் பண்ணுப்பா என்றார்,உடனே செல்லை எடுத்து ட்ரை பண்ணினான்,சிக்னல் கிடைக்கவில்லை ரொம்ப பதறினான்,அவளும் வலியில் துடித்தாள்..நீ போய் கீழே லேண்ட் லைன் இருக்கு போய் போன் பண்ணு,உடனே கீழே ஓடினான் அவன்,தாத்தா அவளுக்கு தையரியம் கொடுத்தார்,"ஒன்னும் , ஆகதுமா நீ கவலபடதா,என்றார்..அவளும் கொஞ்சம் வலிமையானால்..போனவன், வேகமாக மாடி ஏறி வந்தான், ஆம்புலன்ஸ்கு போன் பண்ணன்,ரிங் போய்ட்டே இருக்கு எடுக்க மாற்றங்க..என்று செய்வதறியாது பதறினான்,இருப்பா நாம முதல்ல இவளை கீழே அழைச்சிட்டு போவோம்,அந்த பெஞ்ச் சோடு அவளை இருவரும் தூக்கிக்கொண்டு படி இறங்கினர்..இறங்கும் போது படியில் அருகில் உள்ள மர சில் கிழித்தது தாத்தாவின் காலில், வலியில் துடித்தார்..ரத்தம் அதிகமாக சென்றது இந்த வலியில் முழங்கால் வலி பெரிதாய் தெரியவில்லை..மூவரும் வாசலை வந்து அடைந்தனர்..நான் போய் ஏதாவது வண்டி வருதானு பாக்குறேன்னு அவன் கிளம்பினான்,மேலும் வலி அவதியால் அவள் அழுகை சத்தம் அதிகமானது,மழை விட்டபாடில்லை,
திடீரென உள்ளே போன் அடிக்கும் சத்தம் கேட்டது,தாத்தா உடனே ஓடி போய் போனை எடுத்தார்..
"ஹலோ, நாங்க ஆம்புலன்ஸ் சர்விஸ் இந்த நம்பர் லேந்து போன் வந்துச்சி ஏதாவது அர்ஜெண்ட் ஆஹ்", ஆமாங்க சார் இங்க ராஜாஜி காலனில ஒரு பொண்ணு பிரசவ வலில துடிக்குறது சீக்கிரமா வாங்க சார்,என்றார் தாத்தா..
ராஜாஜி காலனியா,சார் அங்க மார்பளவுக்கு தண்ணி இருக்கு வண்டி வராது,"நீங்க என்ன பண்ணுங்க நீங்க ரெண்டு தெரு தள்ளி உள்ள பிரிட்ஜ் கிட்ட வந்துடுங்க"..நாங்க வந்து அங்க வைட் பண்றோம்.. ஓகே சார் நாங்க வந்துடுறோம் என்றார் தாத்தா..உடனே வாசலுக்கு வந்து அவளை பார்த்து,ஆம்புலன்ஸ் பிரிட்ஜ் கிட்ட இருக்கு நாம அங்க போனும்மா என்றார் தாத்தா..அவள் நிலைதடுமரியவளாய் அவர் எங்க வரட்டும் உங்களுக்கு வேற கால்ல ரத்தம் நிக்கம போட்டு இருக்கு.. உங்களுக்கு ஏன் சிரமம் அவர் வரட்டும் என்றாள் அவள்..தாத்தா உடனே இங்க பாரும்மா இதனை நாள் வரைக்கும் என்னை யாரும் அப்பனு கூப்பிட்டது இல்ல,கூப்பிட ஒரே ஆளும் கடைசி ஆளும் நீ தான், நீ என் மக மா நான் உனக்காக இத கூட செய்ய மாட்டானா..
என்றவாறு தன் வேட்டி துணியை சிறிது கிழித்து காலில் வலியும் ரத்தத்தில் கட்டினார், அந்த வாங்கு(பெஞ்சு)50 வருசத்துக்கு முன்னாடி ஒரு நல்ல மரத்துல செய்ஞ்சது அவ்வளவா கணம் இருக்காது.. தண்ணியில மிதக்கும் என்று தாத்தா உணர்ந்தார்..
ஒரு பெரிய பாலிதீன் பை கொண்டு அவளை(மகளை) போர்த்தினார். சட்டென்று வாங்குவை இழுத்து படியில் இருக்கும் தண்ணீரில் இறக்கினார்..அது,கட்டுமரம் போல் மிதந்தது.. போன அவனை(கணவனை) இன்னும் காணோம்..மழை போல் அவளது பிரசவ வலியும் உயர்ந்துகொண்டே இருந்தது..
மெல்ல, மெல்ல தண்ணீரில் நடந்தார் தாத்தா..வாங்குவை தள்ளிகொண்டு சென்றார்.அவளின் அழுகை சத்தம் அதிகரித்து கொண்டே இருந்தது..மெல்ல,மெல்ல சென்று கொண்டே இருந்தார்..ஒரு வழியாய் ஒரு தெருவை கடந்தார்..இங்கு மழை நீர் மார்பளவுக்கு இருந்தது...பொறுமையாக தள்ளிக்கொண்டே இருந்தார்..சட்டென்று ஒரு கம்பி அவரை பதம் பார்த்தது அதுவும் அடிபட்ட அதே இடத்தில் ரத்தம் அதிகமாக வழிந்து மழை நீருடன் கலந்தது.. வலியில் துடித்தார் தாத்தா..ஒரு வழியாக ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்தை பார்த்தார்,மனதில் ஒரு மகிழ்ச்சி..கொஞ்சம் வாங்குவை வேகமாக தள்ளினார் தாத்தா..சிறுது நேரத்தில் அவனும்(கணவனும்) அந்த இடத்திற்கு வந்தான்..இருவரும் சேர்ந்து வாங்குவை தள்ளினர்.. ஒரு வழியாய் ஆம்புலன்ஸை வந்து அடைந்தனர்..
அவளை இருவரும் சேர்ந்து தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றினர்..ரொம்ப, நன்றிங்க தாத்தா என்றான் அவன்,அவளோ (மகளோ) அழுதவளாய் என்னோட சொந்த அப்பாவா இருந்தாலும் இப்படி உதவி செய்வராணு தெரியல,ரொம்ப நன்றி அப்பா என்றாள்,தாத்தாவின் கண்களில் நீர் கசிந்தது..அப்போது, அவள் என் குழந்தைக்கு உங்க பேர்தான் வைக்கணும், அப்போது அவள் கேட்டால் "உங்க பேர் என்னப்பா"???