கடுகண்னாவ பார்சல் குண்டு கொலை

லெண்டுவா லொகுகே ஜெயவர்தன (Lenduwa Lokuge Jayawardene) என்பவன் கண்டியில் உள்ள திருகோணமலை வீதியில் 129 இலக்கத்தில் சில உதவியாளர்களை வைத்து “ஜெயசிரி தையல் மார்ட்” என்ற பெயரில் தையல் கடை வைத்து நடத்தினான் அவன் திருமணமாகாதவன். ஜெயவர்தனாவுக்கு தையல் வேலை தெரியாது
, சிறுவர்களுக்கு அரை கால் சட்டையும் சேர்ட்டும் தைத்து கொடுப்பான். சிறுவர்களை தனி அறைக்கு கூட்டிச் சென்று அளவெடுபான், அவனிடம் ஜெம்ஸ் மோட்டார் சைக்கில் இருந்தது . அதில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு வெகு தூரம் செல்வான் அதனால் கண்டியில் உள்ள பல சிறுவர்கள் அவனோடு நெருங்கிப் பழகினார்கள் . ஜெயவர்தனா சிறுவர்களோடு நெருங்கி பழகுவதையம் அடிக்கடி கொஞ்சுவதையும் கண்டும் காணாது மாதிரி தம் வேலைளை செய்து வந்தார்கள் கடையில் வேலை செய்தவர்கள். . தனி அறையில் ஆடைக்கு அளவு எடுப்பது என்று சொல்லி சிறுவர்களின் உடலைத் தடவி பிரத்தியோக பகுதிகளில் தொட்டு தன் பாலியல் இச்சையைப் ஜெயவர்தன பூர்த்தி செய்வான். இது ஒரு வகை பாலியல் வன்முறையாகும்; அதற்கு சிறு பரிசுகள். இனிப்புகள் சில வேளைகளில் சிறுவர்களுக்கு சில்லரையும் கொடுப்பான்.
****
கண்டி தர்மராஜா கல்லூரியில் படிக்கும் கபகமுவ கிராமத்தைச் சேர்ந்த சமரசிங்கா என்ற பதினான்கு வயது சிறுவன், தோற்றத்தில் அழகானவன். அவனுக்கு ஒரு அண்ணனும இரு அக்காமாரும் இருந்தனர் . சமரசிங்காவின் அண்ணன் ஒரு கண்டிப்பான பேர்வழி . சொந்தத்தில் தொழில் செய்பவன் . சமரசிங்காவின் அக்கா பொடிஹாமி, செனவரத்தினா என்பவனை திருமணம் செய்து கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியையாக இருந்தாள். சமரசிங்காவின் சகோதரங்கள் தங்களின் தம்பி படித்து உயர் பதவி வகிக்க வேண்டும் என ஆசைப் பட்டனர். அவன் மேல் அன்பு வைத்திருந்தனர். இன்னொரு அக்கா டிங்கிரி அம்மா, ஒரு பயற்சி பெற்ற நேர்ஸ். இவர்களின் தந்தை ஒரு விவசாயி.

தர்மராஜா கல்லூரியில் சமரசிங்காவை விடுதியில் தங்க வைக்கப் போதிய நிதி வசதி இல்லாததால் ஆரம்பத்தில் ஒரு ஆயுர் வேத வைத்தியரின் வீட்டில் தங்க வைத்தனர். அங்கு இட வசதி இல்லாததால் . கண்டியில் தையல் கடை வைத்துள்ள ஜெயவர்தனே என்பவனின் வீட்டில் 1945 ஆம் ஆண்டு முதல் தங்க வைத்தார்கள். அவர்களுக்கு ஜெயவர்தனா எப்படிப் பட்டவன் என்பது அப்போது தெரியாது.

ஆரம்பத்தில் சமரசிங்கவை அரவணைத்து மற்ற சிறுவர்களை போல் ஜெயவர்தன நடத்தினான் . அவனின் உள் நோக்கம் சமரசிங்கவுக்கு தெரியவில்லை. சிறு பரிசுகள். இனிப்புகள் அவனுக்கு அடிக்கடி ஜெயவர்தனா. கொடுப்பான் . சட்டை தைத்து கொடுப்பான்.

சமரசிங்கவுக்கு தினமும் டயரி எழுதும் பழக்கம் உண்டு. காலம் போகப் போக சமரசிங்காவுக்கு ஜெயவர்தனாவின் பாலியல் சேட்டைகள் புரிந்தது. இரவில் சமரசிங்காவுக்கு அருகில் போய் பக்கத்தில் படுப்பான். அதை சமரசிங்காவால் தடுக்க முடியவில்லை. ஜெயவர்தனா ஒரே பால் சேர்கை விரும்பி என்பதை சமரசிங்கா விரைவில் புரிந்தான். சமரசிங்கா தனக்கு மட்டும் தான் வேறு எவரும் அவனை விரும்பக் கூடாது என்ற மனநிலை ஜெயவர்தனா மனதில் வளர்ந்தது.

கல்லூரி லீவு விட்டதும் சமரசிங்கா தன் கிராமத்துக்கு திரும்பியதும் ஜெயவர்தனாவைப் பற்றி வீட்டில் புகழ்ந்து பேசினான். சமரசிங்கா தன் அக்கா டிங்கிரி அம்மாவின் படத்தைக் கூட ஜெயவர்தனாவுக்கு அனுப்பினான்.ஒரு வேலாய் அவநை குடும்பத்தில் மாப்பிளையாய் கொண்டு வரும் எண்ணத்திலிலோ என்னவோ. லீவுநாட்கள் முடிந்து ஜெயவர்த்தனாவின் தையல் கடைக்கு சமரசிங்கா திரும்பினான் . ஜெயவர்த்தனா மாமா தன்னை அன்பாக நடத்துவான் என்று எதிர்பார்த்தான் சிறுவன். அவன் நினைத்தது ஓன்று நடந்தது வேறு ஓன்று.

ஜெயவர்த்தனா பின்னர் தனது நோக்கங்களை அவனுக்கு தெளிவுபடுத்தினான். சமரசிங்க பதற்றமடைந்தான். மேலும், தன் மீது மீண்டும் மீண்டும் ஜெயவர்த்தனவின் பாலியல் தாக்குதல்களை அவனால் தாங்க முடியவில்லை. வெளிப்படையாக சமரசிங்க போராடினான். அவனுக்கு ஒருவரும் உதவிக்கு இல்லை . அவனால் ஜெயவர்தனாவை எதிர்த்து போராட முடியவில்லை ஜெயவர்தனா அதை அறிந்திருந்தான். ஜெயவர்தனே மாமா தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் சேட்டைகளுக்கு பயன்படுத்தப்படுவதை சிறுவன் முற்றாக வெறுத்தான். எவரிடமும் சொல்ல முடியாது அழுதான்., பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியருக்கு தான் சொல்லப்போவதாக ஜெயவர்தனாவை பயமுறுத்தினான் . ஜெயவர்த்தன இனி தனக்கு "மாமா" இல்லை . அவர் ஒரு அசுரன் என்று சிறுவன் சமரசிங்கா கருதினான். தினமும் சிறுவனை பாலியல் தொந்தரவு செய்தான் ஜெயவர்தனா.

அவர் ஒரு நல்ல- ஒரு குணம் உள்ள மனிதர் அல்ல , அவர் தான் விரும்பியபோது எல்லாம் சமரசிங்காவைப் பிடித்துத் துன்புறுத்தினாரன் , மிகவும் கொடூரமான முறையில் அவனை பாலியல் செட்டைகளில் உற்படுத்தினான். சமரசிங்கா , சிறுவன் அவரின் பிடியில் இருந்தும் சில நேரம் தப்பி ஓடிவிடுவான் .

1945 ஜூன் 21 ம் திகதி சமரசிங்கவின் நாட்குறிப்பில் இந்த சோகமான பதிவு உள்ளது:
"ஜெய்வர்தனே மாமா . என்னிடம் இனி உனக்கு சட்டை தைக்க மாட்டேன் . முந்தைய நாள், நான் மமாமாவின் பாலியல் விளையாட்டுக்கு நான் சம்மதிக்காததால் எனக்கு பாடம் படிப்பிக்க ஜெயவர்தனே மாமா அப்படி சொன்னானர் .”
ஒவ்வொரு நாளும் சிறுவனை தன் விருப்பத்துக்கு இணங்க துன்புறுத்துவான் ஜெயவர்தனே. அவனது தொந்தரவை அந்த சிறுவனால் சகித்து கொள்ள முடியவில்லை. அதனால் அவனால் படிக்க முடியவில்லை . வகுப்பில் பாடங்களில் குறைந்த புள்ளிகள் எடுத்தான். சமரசிங்கா எதிர்க்கும் போதெல்லாம் உக்கிரமாக துன்புருத்தி தன்னை திருப்தி படுத்துவான் இப்படி 18 மாதங்கள் சமரசிங்க நரக வேதனை பட்டான். அவனின் புத்திசாலித்தனம் படிப்படியாக் குறையத்தொடங்கியது . நாண்பர்களோடு விளையடுவதை குறைத்தான். ஒவொரு நாளும் ஒரு இயந்திரம் போல் பயத்தோடு வீடு திரும்புவான். அவனோடு நிர்வாணமாக தொட்டில் குளிக்க அவன் வரும் வரை காத்திருப்பான் ஜெயவர்த்தனே. சமரசிங்காவால் மேலும் பொறுத்துக் கொண்டு இருக்க முடியவில்லை ஜனவரி 1947 இல் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓட முடிவு எடுத்தான்.

பெப்ரவரி 1 ஆம் திகதி தன குடும்ப நண்பர் கொடிக்கார ஆராச்சிக்கு தன் பிரச்சனை முழுவதயும் விபரமாக சொன்னான் சமரசிங்கா . நடந்ததை கேட்டதும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரால் அதை நம்ப முடியவில்லை . எதோ கற்பனையில் சமரசிங்க சொல்லுகிறான் என்று அவர் முதலில் நினைத்தார். அவன் நடந்ததை சொல்லும் போது அவன் கண்களில் கண்ணீர் வந்ததை கண்டதும் அது உண்மை என்று அவருக்குத் தெரிய வந்தது. உடனே சமரசிங்காவுக்கு உதவ கொடிக்கார முடிவு எடுத்தார். உனக்கு அவன் வீட்டில் இருந்து வேறு வீட்டில் தங்க உதவி செய்கிறேன் என்று அவனுக்கு சொல்லி , தன் நண்பன் ஃபேன்ஸி ஸ்டோர்ஸ் உரிமையாளர் வீட்டில் பெப்ரவரி 8 முதல் தங்க ஒழுங்குகள் செய்தார் .
ஜெயவர்த்தனவால் இதை அனுமதிக்க முடியவில்லை . அவருக்கு சிறுவன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டுபிடிப்பது எளிது, ஜயவர்தனா எப்படியோ சேரசிங்கா சிங்கா இருக்கு, இடத்தைக் கண்டு படித்து அங்கு சென்றான். சிறுவனை பிரிந்து ஜயவர்தனாவால் இருக்க முடியவில்லை அங்கு சென்று திரு அல்விஸ் அப்புகாமியிடம் , சமரசிங்கவை தனிடம் திரும்பித தரிம்படி கேட்டான் . ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளர் திரு. அல்விஸ் அப்புகாமி கவலை அடைந்தார். பையனைக் காப்பாற்றுவதற்கு அவருக்கு உண்மையில் தார்மீக உரிமை இல்லை. ஆகவே ஜெயவர்த்தனாவிடம் அந்த சிறுவனை ஒப்படைத்தார். சமரசிங்க பெற்றோருக்கு விஷயங்களை தெரிவித்தபோது, அந்த சிறுவன் தனது புதிய அல்விஸ் அப்புகாமி வீட்டில் தங்கியிருக்க அவர்கள் வலியுறுத்தினர்.
ஜெயவர்தனே கொடிக்கார ஆராச்சியை பார்த்து : “ இந்த சிறுவனை என்போறுப்பில் இவனின் பெற்றோர்ரகள் விட்டுள்ளனர். நான் இவனுக்கு ஆடை உணவு.ம, படுக்க கட்டில் எல்லா வசதிகளும் செய்துகொடுத்துள்ளேன். அவன் ஒரு கேட்டவன். என் வீட்டில் இருந்து ஒரு மோதிரத்தை திருடிக் கொண்டு ஒடி போய் உன் வீட்டில் இருக்கிறான். இவனை என்னிடம் திருப்பித் தந்து விடு இல்லையேல் , உன்னை கொன்று விடுவேன் என்று தன் மடியில் இருந்த கத்தியை எடுத்து கோபத்தோடு அவனுக்கு காட்டி பயமுறுத்தினான் ஜெயவர்தனே . இதை அறிந்த சமரசிங்கவின் அண்ணன் சமரக்கொன் கடுகண்ணாவ டார்சான் பஸ் கொம்பனி மேனேஜர் ஜெயசிங்கே வீட்டில் தன் தம்பி சமரசிங்கே தங்க ஒழுங்கு செய்தான் 1947 ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி கண்டியை விட்டு நிம்மததியோடு கடுகண்ணாவுக்கு ஜெயசிங்கா வீட்டில் தங்க சமரசிங்கா புறப்பட்டான். அதோடு அவனின் பிரச்சனை முடியவில்லை.
ஜெயவர்தனாவுக்கு சிறுவன் மேல் இருந் ஆசையை தடுக்க முடியவில்லை. எப்படியோ விசாரித்து சமரசிங்க கடுகண்ணாவில் உள்ள ஜெயசிங்கா வீட்டில் இருப்பதை அறிந்து அவன் அங்கு சென்றான் . அவன் ஜெயசிங்காவிடம் “சிறுவனை என்னிடம் திருப்பி அனுப்பி விடு.. அவன் என் வீட்டில் இருந்து போன பின் எனது வியாபாரம் குறைந்து விட்டாது . அவன் என் வீட்டில் இருப்பது நல்ல சகுனம் . அருள் உள்ள அவன் முகம் எனக்கு வாடிகையாளர்களை கொண்டு வருகிறது . அவன் என் வீட்டில் இருப்பது எனக்கும் அங்கு வேலை செய்பவர்களுக்கும் நல்ல சந்தோஷம் ” என்று ஜெயவர்தனா சொன்னான் ;
ஜெயசிங்கவுக்கு ஜெயவர்தனாவின் பேச்சு பிடிக்கவில்லை. சமரசிங்கவை அவனோடு அனுப்ப மறுத்து விட்டான். அன்று கோபத்தோடு கண்டிக்குப் பொய் தர்மராஜா கல்லூரிக்கு முன் சிறுவன சமரசிங்காவுக்காக காத்திருந்தான். அவன் கல்லூரியில் இருந்து வெளியே வந்தும் அவனை வலாத்காரமாக கையில் பிடித்து இழுத்து தன்னோடு கூட்டிச் செல்ல முயன்றான். அவன் அவனோடு போக மறுத்ததும் கோபத்தில் சிறுவனை ஜெயவர்தனா தாக்கினான். சமரசிங்கா போலீசுக்கு முறையிட்டான் போலீஸ் ஜெயவர்தனா மேல் உடனே நடவடிக்கை எடுத்தது. ஜெயவர்த்தனா அதை எதிர்பார்கவில்லை. உடன சமரசிங்கவின் சகோதரனை உடனே கண்டிக்கு வரும் படி தந்தி அனுப்பினான். மார்ச் 25 ஆம் திகதி சமரசிங்கவின் அண்ணன் சமரக்கொனே ஜெயவர்தனாவை சந்தித்து பேசியபோது தான் செய்த செயலுக்கு அவன் விளக்கம் கொடுத்தான்.
“ நன் உன் தம்பியை என்னோடு வரும்படி கூப்பிட்டபோது அவன் மறுத்தான். அவனை என் பொறுப்பில் விட்டது உங்கள் குடும்பம் அதனால் அடித்தேன். அதனால் போலீஸ் என்மேல் கேஸ் பதிவு செய்து இதனை பெரிது படுத்தி உள்ளது. அந்த கேசை வாபஸ் வாங்கும் படி போலீசுக்கு சொல்லும் படி” வேண்டினான் .
“ நீ ஏன் என் தம்பியை அடித்தாய்”?
“அவனை என்னோடு வரும்படி கேட்டேன். அவன் மறுத்தான். அதனல் கோபத்தில் அடித்தேன்: இப்போ அது போலீஸ் கேசாகி விட்டது”:

” நீ என் அவனைநடத்திய விதம் சரியில்லை ”?

“அவன் என் வீட்டை விட் டு போகமுன் அடிகடி என் வீட்டுக்கு என்னை சநதிக்க வருவான்”

”அப்படி இருக்காதே நீ அவனை நடத்திய விதம் . அவனுக்கு உன் மேல் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவன் உன்னோடு வர மறுத்தான்

“இல்லை அவனை அன்பாக என் சகோதரன் போல் நடத்தினேன். அவனை பிரிந்து என்னால் இருக்கமுடியாது “

“உன்னை நம்ப முடியாது. என் தம்பி முழுக் கதையும் எங்கள் குடும்பத்துக்கு சொன்னான் . அவனை உன்னோடு அனுப்ப முடியாது. அவனை மறந்து விடு” சமரக்கோன் கடும் தொனியில் ஜெயவர்தனாவுக்கு சொன்னான்

“அப்படியா பேசுகிறாய்? .. நான் உன்னையும் உன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறேன. என்னைப் பற்றி உனக்குத் தெரியாது ” என்று: கோபத்தோடு சொல்லிப் போனான் ஜெயவர்தனே.

ஜெயவர்தன. சூனியம். ஜோதிடம். மந்திரம் அகியவற்றில் நம்பிக்கை உள்ளவன்.
ஜெய வர்தனாவின் நண்பன் சைமன் என்பவன் அரைகுறை ஜோதிடன்.. அவனிடம் தனது ஜாதகத்தையும் சமரசிங்கவின் ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்த்து அந்த பையன் தன்னிடம் திரும்பவும் வருவானா
? என்று கேட்டான் . சைமன் அதுக்கு சமரசிங்கவுகும் ஜெயவர்த்தனவுக்கும் நீண்ட ஆயுள் இல்லை என்று எச்சரித்தான்.
“எனக்கும் சமரசிங்கவுக்கும் பொருத்தம் இல்லை என்றால் மந்திரம், சூனியம் செய்தாவது அவன் மனதி மாற்ற முடியுமா “? என்று சைமனிடம் கேட்டான்.:
“அது நடக்காது. நீ அவனை மறந்து விடு” என்று சைமன் தன் நண்பனுக்கு சொன்னான் .
கோபத்தில் ஒரு சண்டியன் கருணாரத்திவிடம் போய். “நீ சமரசிங்கவின் கைகளையோ அல்லது கால்களையோ முறித்தாவது அவனை என்னிடம் கொண்டு வா. நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தருவேன்” என்றான். ஜெயவர்தனே . அந்தக்காலத்தில் அது பெரிய தொகை அதுக்கு கருணாரத்தினா மறுத்து விட்டான்.
எல்லாவழிகளிலும் சமரசிங்கவை தனது சொந்தமாக்க முயற்சிதும் வெற்றி பெறாததால் ஜெயவர்தனா ஒரு பயங்கர முடிவுக்கு வந்தான். சமரசிங்கவையும் அவன் சகோதரங்களையும் அழிக்க முடிவு எடுத்தான். கடை ஒன்றில் போய் டைனமைட்., பட்டரி . மெழுகு மற்றும் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கி நான்கு வெடி குண்டுகள் தாயரித்து சமரசிங்கா, அவனின் அண்ணன் சமரக்கோனுக்கும் மற்று இரு சகோதரிகளுக்குமாக நான்கு குண்டுபார்சல்களை .தயாரித்தான் . அந்த பார்சல்களை பிரித்தவுடன் “இழு” (PULL): என்று. ஆங்கிலத்தில் இருந்தது. நான்கு பார்ச்ல்களில் இரண்டை கொழும்பு மத்திய போஸ்ட் ஆபீசிலும் மற்ற இரண்டு பார்சல்களை கொழும்பு பம்பலப்பிட்டிய ஹவ்லொக் டவுன் போஸ்ட் ஓபிசிலும் இருந்து அவர்களின் விலாசங்களுக்கு ஜெயவர்தனா அனுப்பினான். அனுபியவர் பெயர் குடும்பத்தில் ஒருவரின் பெயராக இருந்தது. உதாரணத்துக்கு சமரசிங்சகாவுக்கு அவனின் சகோதரி ஒருத்தி அனுப்புவது போல் இருந்தது.
.கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய சமரசிங்கா தனக்கு சகோதரியிடம் இருந்து பார்சல் வந்திருகிறது என்று கண்டு மகிழ்ச்சியோடு பார்சலை பிரித்து அதில் எழுதிய படி வயரை இழுத்தான் அவ்வளவுதான், குண்டு வீட்டுக் கூரை பிய்துக்கு கொண்டு வெடித்தது. அந்த இடத்திலேயே சமரசிங்காவின் படு காயம் அடைந்தான் . சேர சேரசிங்காவின் சகோதரிக்கு ஆங்கில் தெரியாததால் இழு என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது அதனால் அவளுக்கு புரியவில்லை. அதனா ல் அவள் வயரை இழுக்கவில்லை. அவளின் உயர் தப்பியது. மற்ற சகோதரி வயரை இழுத் போது வயர் வேறுபட்டு கையோடு வந்தது , குண்டு வெடிக்கவில்லை. சமரக்கோன் எதிலும் கவனம எடுத்து செயல் படுபவன் . அவனுக்கு ஜெயவர்தனா மேல் எப்பவம் சந்தே கம் . ஆகவே அவன் வந்திருந்த பார்சலை பிரிக்கவில்லை. அவனின் உயிரும் தப்பியது. ஜெயவர்தனாவின் கொலை திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை, தான் சந்தேகித்த மாதிரி தனது தம்பிக்கும் ஒரு பார்சல் வந்திருக்கலாம் அதை அவன் பிரிக்காமல் தடுக்க வேண்டும் என்று கடுகண்ணாவுக்கு உடனே விரைந்தான் . அனால் தாமதித்து விட்டான். அதற்கிடையில் சமரசிங்காவுக்கு கிடைத்த குண்டு வெடித்து விட்டது .

சமரசிங்கா உடனே கடுகண்ணாவை வைத்திசாலைக்கு பலத்த ககாயங்களுடன் எடுத்து செல்லப்பட்டான் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 2l ஆம்திகதி பின்னேரம் 4.20 மணிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படு பலத் காயங்களோடு அவன் உயிர் பிரிந்தது.14 வயதில் கண்டிக்கு படிக்க வந்த அப்பாவி 18 வயது சிறுவனின் உயிர் ஒரே பால் குற்றவவாளி ஒருவனால் இளம் வய தில் பிரிந்தது

பொலீசுக்கு குற்றவாளி யார் என்று காண்டு பிடிக்க அதிக நாட்கள் எடுக்கவில்லை, காரணம் ஏற்கனவே சமரசிங்கவுக்கு எதிரான ஜெயவர்தனாவின் குற்ற செயல் போலீசில் பதிவாகி இருந்தது. ஜெயவர்தனா சமரசிங்கவை நடத்திய விதத்தை பற்றி தையல் கடையில் வேலை செய்தவர்கள் சாட்சியின் போ து சொன்னார்கள் ஜெயவர்த்தன சிறுவர்களோடு ஒரே பால் சேர்க்கையில் (Gay) ஆர்வம் உள்ளவன் என்று பொலீசுக்குத் தெரிய வந்தது

கண்டி முழுவதும் குண்டு வெடிப்புச் சம்பவம் பற்றிய செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஆகவே எந்த பார்சலிலும் குண்டு இருக்கலாம் என மக்கள் பயந்தனர். தபால் கந்தோருகளில் பார்சல்களை கையாளுவதில் அதிக கவனம் எடுக்கும் படி தபால் அதிபரிடம் இருந்து கட்டளை பறந்தது.

போலீஸ் விசாரனையை வெகு விரைவாக நடத்தி ஜெயவர்தனாவை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து வழக்கை போலீஸ் பதிவு செய்தது. வழக்கு எட்டு நாட்கள் நடந்தபோது 40 சாட்சிகள் சாட்சிமளித்த னர். அதில் ஒருவராவது ஜெயவரதனா குண்டை தயாரித்ததை கண்டததாக சொல்லவில்லை. கடையில் குண்டு தயாரிக்க பொருட்கள் வாங்கியதாக கடைக்காரன் சாட்சியமளித்தான் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் குற்றவாளிக்கு எதிராக இருந்தது நீதிபதி தீர்ப்பை கொடுக்க முன் குற்றவாளி தனக்கு ஆஜராகும் வக்கீலை கூப்பிட்டு ஒரு வேண்டுகோள் விட்டான். தன் ஜாதகத்தில் உள்ளபடி ஜெயவர்தன தனது வழக்கின் தீர்ப்பு பதினோரு மாணிக்கு முதல் கொடுத்தால் அது தனக்கு சாதகமாக இருக்கும் என்றும் அதன் பின் தீர்ப்பு கொடுத்தால் தான் குற்றவாளி என தீர்ப்பு இருக்கும் என்று சொன்னான் . அவன் சொன்னதைக் கேட்டு கோர்டில் எல்லோரும் கடிகாரத்தை பார்த்தபடி இருந்தனர். ஒருவனின் விதியை யாரால் மாற்ற முடியும் காலை 11.05 மணிக்கு ஜுரிகள் வெளியே வந்து ஏகமனதாக ஜெயவர்தனா குற்றவாளி என்று தீர்ப்பு சொன்னார்கள் . நீதிபதி ஜெயவர்தனாவுக்கு மரணதண்டனை விதித்தார்.

ஜெயவர்தனா சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்தான் அது நிராகரிக்கப் பட்டது பிரிவி கவுன்சில் அப்பீலும் தோழ்வியில் முடிந்தது. சில கத்தோலிக்கப் பாதிரிமார் களும், புத்த பிக்குமார்கள் குற்றவாளியின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி கேட்டும் பயனில்லை. தன்னை கண்டி போகம்பர ஜெயிலில் தூக்கில் இடாமல் கொழும்பு வெலிக்கடை ஜெயிலில் தூக்கில் இடும் படி நீதிபதிடம் குற்றவாளி விடுத்த வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக் கொண்டு 1950 ஆம் ஆண்டு 18, ஆம் திகதி சனிக்கிழமை சூரிய கிரகண தினமன்று ஜெயவர்தனே கொழும்பு வெலிக்கடை ஜெயிலில் தூக்கில்யிடப் பட்டான்
****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (9-Jun-18, 3:45 pm)
பார்வை : 142

மேலே