உதிரும் இழை

காலை குளிர்
மறையும் அழகு,
கருநிற மேகங்கள்
மஞ் அரிதாரம் பூசி,
நெருப்புத் தணலை
தலையில் கொட்டிய வேளை,
கொம்பொலி நெரிசலில்லா
சாலை எனும் ஓடையில்,
துடுப்பாக பற்றிய
அலையியற்றின் வேகமானியை
அதிகரித்து காலதேவனைத் தேட,
அங்கோர் மரத்தின்
அருகே நின்று ஒருத்தி,
உதிரும் இலைகளுக்கும்
நிழல் தரும் மரமாக நின்றாள்..