சாலையோரம்

பேருந்துக்காக
நெடுநேரம்
நின்று
கொண்டிருந்தேன்......

அவசர அவசரமாக
சென்ற
அந்த கார்கள்
புழுதிகளை
வீசிப் போக
பறந்து
அங்கு
கிடந்த
எச்சை இலைகளில்
படர்ந்தது........

அதை
துடைத்து
தன்
பசியை
தீர்த்து கொண்டிருந்தது
அங்கு
ஒரு கூட்டம்......
அதை
பார்த்து
பரிதாப பட்டேன்

பக்கத்தில்
பார்த்தேன்......
கிழிந்த
துணிகளில்
கூடாரங்கள்.....

அந்த
சாலையோர
குடிசைகள்
உணர்த்தியது
நம்
நாட்டின்
வறுமை
நிலையை............

சாப்பிட்டு
உயிர் வாழும்
மனிதர்கள்
மண்ணில் இருந்தாலும்.......
சாப்பாட்டிற்காக
உயிர் வாழும்
மனிதர்களும்
இருக்கிறார்கள்.........
என்று
நினைனைக்கையில்
கையில்
இருக்கும்
சாப்பாட்டை
உள்ளுக்குள்
செல்லுத்த
உள்ளம்
உறுத்துகிறது................

சாலையோரம்
நான் கண்ட
நம்
நாட்டின்
வறுமை நிலை.......
எப்பொழுது
இல்லை
என்று
ஆகும்
இந்த சூழ்நிலை......................

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (15-Jun-18, 5:52 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : saalaiyoram
பார்வை : 160

மேலே