தவித்திருக்கிறேன்

தவித்திருக்கிறேன்
உன் வரவைத்தேடி
.
தொலைவினில் தெரிகிறது
உன் உருவம்
.
தொடர்ந்து வருகிறது
உன் வாசம்
.
தொட்டுவிட்டு செல்கிறது
உன் நேசம்
.
என்மேல் படர்கிறது
உன் பாசம்
.
என்னுடல் சிலிர்க்கிறது
உன் ஸ்பரிசம்
.
தொலைந்தே போய்விடுகிறது
என் விலாசம்
.
இருந்தாலும்
.
.
தவித்திருக்கிறேன்
உன் வரவைத்தேடி

எழுதியவர் : வெங்கடேஷ் (26-Jun-18, 4:29 pm)
பார்வை : 610

மேலே