மனைவிக்கு
வீட்டிற்குள் நுழையும்போது
மனைவிக்கு என்மீது
பாசமிருந்தால்
பாயாசம் மணக்கும்!
கோபம் என்றால்
பாத்திரங்கள் உருளும்!
அதீத கோபமென்றால்
வீடு முழுவதும் நிசப்தம்
சூழ்ந்திருக்கும்!
நானோ
ஓர் மூலையில் நிற்க
வேண்டியிருக்கும்
என் மூளையை
கசக்கியபடி!

