பிரிவு

பிரிவின் ஒத்திகை
தொப்புள் கொடி துண்டிப்பில்
தொடங்கியது....
விரல் பிடித்த நடை முதல் -
கை பிடித்த ஓட்டம் வரை.....
நட்பு தந்த நண்பனுக்கு தெரியும்
தோழமைக்குள்ளே பிரிதல் வருத்தம்..
பெற்றோரின் கருவிழி கரையும்
திருமகளின் திருமண நாளில்.....
சகோதரன் -
மூச்சுக்காற்றில் உயிரும் உருகும்
சகோதரி -
மன்னவனின் கரம் பிடித்து
மண் பார்த்து நடக்கையிலே....பி
பட்டம் படிக்க மகன்
பட்டணம் போகையிலே -
சுருக்குப்பையில் கசங்கிய காசா
சுருங்கி கசங்குது
தாயின் மனதும்......
தன் வீட்டை காக்க தாயகமுண்டு
தாய்நாட்டை காக்க தாமுண்டென எண்ணி
ராணுவம் சென்ற வீரமகனே -
உன் வீரத்துக்கு முன்னாளே
என் பாசம் தோற்றுப்போனதைய்யா.....
எல்லையில் காக்குது என் சாமி
என் சாமியை காக்கனும் எல்லைச்சாமி.....
ஊரை காக்குது என் சாமி
என் சாமி உயிரை காக்கனும் குலசாமி.....
பிரிவின் வருடல்கள்
நெஞ்சை கிழித்தாலும்
பிரிந்தவர் நினைவுகள்
இறகாய் வருடமும்.......

எழுதியவர் : கோகுலம் (6-Jul-18, 11:58 pm)
சேர்த்தது : gokulam
Tanglish : pirivu
பார்வை : 119

மேலே