ஆசைதான்
ஆர்ப்பரித்து முந்திவந்து
கரையைத் தொடும்
அலைகள்போல பலரை
பின்னுக்குத்தள்ளி
உன்னைக்காண
வந்து நிற்கிறேன்
உன் கண்களை காண்கிறேன்
கன்னக்குழியில் வீழ்கிறேன்!
உன்னழகைப் பருகிட
ஆசைதான்!
வீரம்கொண்டு நிற்கிறது
என் மீசைதான்!
அருகே என்னையழைக்குமோ
உன் மனசுதான்!
நிலவுதான் என் கைகளில்
வந்திடுமா?
காதலின் ஒளியை அது
தந்திடுமா?
வாழ்வினில் ஒன்றுடன் ஒன்றாய்
சேர்ந்திடுமா?