வார்த்தைகளுக்காக காத்திருப்பாள்


ஒரு வார்த்தையை எடுத்தால்
இன்னொரு வார்த்தை கிடைக்காது
திறந்த வாயில் ஓசை இல்லாத காற்று
மீண்டும் இதழ்கள் சேர்ந்து இன்னொரு
வார்த்தையை உதிர்க்கும்

பேசுவது அவனுக்கு தவிப்பு
ஒவ்வொரு வார்த்தையும்
அவனுக்கு போராட்டம்
வினோத திக்கு வாய் அவனுக்கு

ஆனாலும் அவன் பேசுவதை அவள்
புன்னகையுடன் கேட்டிருப்பாள்

காதலன் வருகைக்காக காதலி
காத்திருப்பது காதலில் புதிதல்ல

ஆனால் அவன் வார்த்தைகள்
ஒவ்வொன்றிற்காகவும்
புதிய புதிய புன்னகையுடன்
அவள் காத்திருப்பாள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-11, 6:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 327

மேலே