மன்றம் வந்த தென்றலுக்கு - கீரவாணி ராகம்
மோகன் - ரேவதி நடித்து 1986 ல் வெளிவந்த திரைப்படம் மௌனராகம். இப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதி, இளையராஜா இசையமைப்பில், எஸ்.பி.பாலசுப்ரமணியன் கீரவாணி ராகத்தில் பாடிய இனிமையான 'மன்றம் வந்த தென்றலுக்கு' என்ற பாடல் பின்னணியில்தான் கேட்கும்.
ஆனந்தவிகடன், 27.03.2013 இதழில் எழுத்தாளர் தமயந்தி எழுதிய ‘ஒரு கனவும் பாதி பலூடாவும்’ என்ற சிறுகதையில் இப்பாடலைக் குறிப்பிடுகிறார். 1986 – 90 களில் காதல் கனவுகளில் மிதக்கும் வாலிப வயதுடைய இளைஞர்கள் தாங்கள் விரும்பும் பெண்ணை நினைந்து இந்தப் பாடலைப் பாடித்திரிவது உண்டாம். யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் மகிழலாம்.
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையே
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல் (மன்றம்)
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன
சொல் சொல் (மன்றம்)
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன
வா வா (மன்றம்)
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் நெஞ்சம் ...Mamndram Vandha Thenralukku Manjam Vara...SPB HIT Songs என்று யு ட்யூபில் பதிந்து இப்பாடலைக் கேட்கலாம்.