3 இறைவணக்கம் - எங்கும் நிறைந்த பொருளே - பந்துவராளி
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய 'இசைத் தமிழ்க் கலம்பகம்' என்ற நூலிலிருந்து 'எங்கும் நிறைந்த பொருளே' என்ற 'பந்துவராளி' ராகப் பாடலைத் தருகிறேன்.
பல்லவி:
.
எங்கும் நிறைந்த பொருளே - இன்றருளே (எங்கும்)
அனுபல்லவி:
தன்கண் பூதம் ஐந்தும் தங்கும்படி விரிந்தும்
நுண்பொருளும் நுழைந்தும் நுண்ணியதின் நுணித்தும்
(எங்கும்)
சரணம்:
இங்கண் சங்கதமுடன் இந்தியும் வந்தடர்ந்த
...எந்தமிழ்இற எரியொடு நெய்யுற
அங்கண நின்னடி அணிந்தனெம் முடிமிசை
...அறிவுரிமை பெற அடிமையெலாம் அற
(எங்கும்)
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்