திருக்குற்றாலம் பதிகம் 8 - சந்தக் கலித்துறை

குற்றாலநாதரைப் பற்றி புகழ்ந்து திருஞான சம்பந்தர் குறிஞ்சிப் பண்ணில் 11 பதிகங்கள் (சந்தக் கலித்துறை) பாடியுள்ளார்..

சந்தக் கலித்துறை
(மா மா விளம் மா காய்)

போதும் பொன்னும் உந்திவந் தருவி புடைசூழக்
கூதன் மாரி நுண்துளி தூங்குங் குற்றாலம்
மூதூ ரிலங்கை முட்டிய கோனை முறைசெய்த
நாதன் மேய நன்னகர் போலுந் நமரங்காள். 8

- கலித்துறை

பதவுரை:

போதும் - மலர்களும்
கூதல் மாரி - குளிர்ந்த மழை
மூதூர் - பழமை வாய்ந்த ஊர்

பொருளுரை:

நம்மவர்களே! மலர்களையும் பொன்னையும் தன்னுடன் தள்ளிக் கொண்டு அருவியும் உடன்வர, குளிர்ந்த மழையும் சிறு சிறு துகள்களாக உதிர்த்து இன்பமளிக்கும் ஊர் குற்றாலம் ஆகும்.

பழமை வாய்ந்த ஊராகிய இலங்கையை ஆட்சி செய்த அரசன் இராவணனைத் தண்டித்து வழிப்படுத்திய சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும் இது எனத் தெரிந்து கொள்வோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jul-18, 9:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே