நிலவின் தீபம்

நிலவின் முழு முகம் பார்க்க,
அதன் சன்னஒளியின்
மென்மை உணர,
சூரியன் மறைந்தே ஆகவேண்டும் .

இல்லையேல் ,
உச்சி வெயில் ஒன்றில்
கைவிளக்கேந்தி வந்த
கன்னிப்பெண் நிலைபோல்
ஆகும் .

தீப சுடரொளியும் ,
தகி தகிக்கும்
பெருங்காட்டு தீயும்,
ஒன்றன்று .

எழுதியவர் : (14-Aug-18, 11:36 am)
சேர்த்தது : சகி
Tanglish : nilavin theebam
பார்வை : 58

மேலே