கள்ளழகர் - வைகை

மையிட்ட விழி கசிந்து உருகிட
கருமைச் சுமந்து நிற்க்கும் கண்ணின் துளி போல...

மலைமேடும் மண்மேடும் கடந்ததிலே
செந்தூரம் பூசிச் செம்புனலாய் சிரிக்கிராயோ மேகத் துளியே...

மனம்கொண்டக் கள்வனை நினைந்து
ஆர்ப்பரிக்கும் சலங்கைப் போல...

சல சலத்துச் செல்கிறாயே
உன்னைக் கவர்ந்த அவனைக்
கூறாயோ மலை மகளே...

நதி மகளைக் கண்டு
மதி தவறிடக் கூடிடுமென
விண்ணைத் தாங்கி நிற்கும் தென்னையும்...

பொல்லாதக் கண்களிலேப் பேரழகி
விழுந்திடாமல் பசுமைச் சிறகால்
அணைத்து நிற்கும் வனமும்..

ஓயாமல் அவள் ஆடி வருகையில்
சிந்திய வியர்வைத் துளியை
அள்ளிச் செல்லும் மேகமும்...

அதைப் பொறுக்காதக் காதலன் போல இராட்சனாய் மறித்து நிற்கும் மலை அரசனும்..

அப்பப்பா வானத்து இளவரசி
வையத்தில் நடந்து வர
எத்தனை எத்தனை ஏற்பாடுகள்....

இடர்கள் பல இருந்தும்
அடங்காமல் பாய்ச்சலிட்டுப் போகிறாயே
இதயம் சுமப்பவனைக் காண அத்தனை அத்தனை அவசரமோ...

விண்ணின் தாரகையே
உன்னைத் தழுவிடவே
வைகைக் கரையினிலே
தவமாய் தவமிருக்கிறான் மாமதுரையின் மன்னன்
உன் இதயம் கவர்ந்த கள்ளழகன்...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (15-Aug-18, 7:47 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 68

மேலே