தெய்வங்கள் தூங்குவதில்லை
சாதிகள் நீ பார்ப்பின் சாமிகள் அங்கில்லை...
மதம் என்று ஒரு வட்டம் தெய்வங்களை அடைப்பதில்லை..
அரசன் ஆண்டி என யாரையும் கடவுள்கள் பிரித்து பார்ப்பதில்லை...
தெய்வத்தின் பேரை சொல்லி நாம் செய்யும் சடங்குகளை கடவுள் கேட்டதில்லை ..
பசி என்று வந்தவருக்கு சோறு போடும் இடத்தில்...
கருணை,பாசம்,நட்பு நிறைந்த இடங்களில் தெய்வங்கள் தூங்குவதில்லை...
தெய்வங்கள் எப்போதும் தூங்குவதில்லை.....

