இன்னும் இன்னும் என்ன வேண்டும் போதும் நீ போதும்

Tamil lyrics for the hit telugu song inkkem inkkem inkkem kaavalae

இன்னும் இன்னும் என்ன வேண்டும்
போதும் நீ போதும்
ஆசை பார்வை ஒன்று போதும்
உயிரின் உயிர் நீளும்

இரவில் நித்தம் கனவில் வந்தாயே
நிஜத்தில் என்னை விட்டுசென்றாயே
உன் அருகில் வர ஆசை கொண்டேனே
நீ தள்ளி தள்ளி விலகிச்செல்ல ஏங்கி ஏங்கி சாகின்றேனே

இன்னும் இன்னும் என்ன வேண்டும்
போதும் நீ போதும்
ஆசை பார்வை ஒன்று போதும்
உயிரின் உயிர் நீளும்

மௌனம் கொஞ்சம் கலைத்திடு போதும்
வார்த்தை ஒன்று சொல்லிடு நீயும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
மரணம் அது தூரம்

காதல் கொன்டே வந்தேன் நானும்
காயம் பல தந்தாய் நீயும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
இன்னும் நீ வேண்டும்

நீ என்னை கடக்கிறாய் மெதுவாய்
என் மனம் உன் நிழல் தொடருதே முடிவாய்

இன்னும் இன்னும் என்ன வேண்டும்
போதும் நீ போதும்
ஆசை பார்வை ஒன்று போதும்
உயிரின் உயிர் நீளும்

கண்னே உன் விரல் கொடு போதும்
பற்றிக்கொன்டே நாட்கள் நகரும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
ஜென்மம் அது தீரும்

சேர்ந்தே தான் நீயும் நானும்
வாழ்ந்திட தான் ஆசைகள் தோன்றும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
மோட்சம் அது சேரும்

நீ என்னை கடக்கிறாய் மெதுவாய்
என் மனம் உன் நிழல் தொடருதே முடிவாய்

இன்னும் இன்னும் என்ன வேண்டும்
போதும் நீ போதும்
ஆசை பார்வை ஒன்று போதும்
உயிரின் உயிர் நீளும்

இரவில் நித்தம் கனவில் வந்தாயே
நிஜத்தில் என்னை விட்டுசென்றாயே
உன் அருகில் வர ஆசை கொண்டேனே
நீ தள்ளி தள்ளி விலகிச்செல்ல ஏங்கி ஏங்கி சாகின்றேனே

இன்னும் இன்னும் என்ன வேண்டும்
போதும் நீ போதும்
ஆசை பார்வை ஒன்று போதும்
உயிரின் உயிர் நீளும்

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (24-Aug-18, 2:00 pm)
சேர்த்தது : vinoth srinivasan
பார்வை : 910

மேலே