தாரமும் ஆவாள் தாயாக
மஞ்சத்தின் மீது நான் துயிலவில்லை
***என் மங்கையும் அதை உணரவில்லை
மெல்ல அருகில் வந்து அமர்ந்தாள்
***தலை வகிடில் விரலால் நடந்தாள்
மூடிய விழியோ இமையுடன் போரிட்டது
அவளை காண
தேடிய மனமோ உமையை ரசித்தது
ஸ்பரிசம் பேண
அரைவிழியால் அவளை நோக்க
ஆடைதிருத்தி அவளுடல் தாக்க
மந்திரம் சொன்னது மனமோ கனகவேல் காக்க
அவள் காதோரம் சொன்ன காதல்
***குயில் நாள்தோறும் பாடும் பாடல்
செம்பவள இதழ் கொண்டு
செம்படர் நெற்றிமீது தந்தாள் ஒரு முத்தம்
அப்பழுக்கற்ற தாயின் அன்பேன
ஆனாள் அவளே மொத்தம்
அன்பில் தாரமும் ஆவாள் தாயாக
***அதை உணர்ந்தேன் நானும் சேயாக