காந்தி தேடிய அமைதி

நூலகத்தில் தேடிய "சத்திய சோதனைகள்",
நாட்டில் கிடைக்காமல் போனதுதான்
அமைதியின் பஞ்சம்!

சிறைகளுக்குப் பின்னால் எழுதினாயே,
குற்றத்தின் வாக்குமூலம் என்றார்கள்,
அது நாட்டின் அமைதிக்கு
நீ எழுதிய தீர்ப்புகள்
என்பதை உணராமல்!

தலையைக் கொய்து வைத்த
ஆங்கிலேயனை அகிம்சையில்
சுட்டெரித்தாய்,
கரங்களில் நெய்து வைக்காத
அந்நியத் துணிகளை எரித்து!

பரபரப்புச் சாலையில்
வேகத் தடைகளாய் மதங்கள்,
ஓட்டுநரின் மதவெறியில்
பலியானதோ பயணிகள்!
வழக்கமாய் காந்தி
வேகமாய் நடைபோட்டார்
அமைதியின் பாதை நோக்கி,
அதுவே பாலமாகியது
இராமருக்கும் நபிகளுக்கும்!

"அமைதிக்கு" ஊரடங்கு உத்தரவு,
பிறப்பித்ததோ
குடியரசுத் தலைவரல்ல,
கோட்சேவின் தோட்டாக்கள்!

காந்தி தேடிய அமைதியோ
கல்லறையில் கிட்டியது,
எங்கள் அமைதியைத் தேடுகிறோம்
உந்தன் கல்லறையில்
தொலைத்து விட்டு!

எழுதியவர் : தமிழொளி (30-Aug-18, 7:15 am)
பார்வை : 409

மேலே