குவளை மலர் கண்ணழகி
செந்தாமரை முகத்தழகி./
செந் தேன் தமிழழகி./
செவ்வாழை இதழழகி./
கொண்டையிலே செம்பருத்தி பூவழகி /
வாழைத்தாரை விரலழகி ./
பொன்னால் வார்த்தது போல் உடலழகி./
வளைந்து நெளியும் இடையழகி./
வளையல் மாட்டிய கரத்தழகி./
மனசை கொள்ளையிட்டு விட்டாள் /
குவளை மலர் விழியழகி /
வட்ட முகத்தழகி./
வளைவான புருவத்தால்
வளைத்துப் போட்டழகி /
வாய் வெடித்த மொட்டாய் மூக்கழகி./
களைந்து இருக்கும் கார்க் கூந்தலழகி./
சொக்க வைத்து விட்டாள் சொக்குப் பொடி
போடாமலே செக்கச் சிவந்தழகி/
சர்க்கரை சொல்லழகி./
சடு குடு ஆடும் நடையழகி./
சங்குப் பல்லழகி./
நதிகள் சங்கமிக்கும் குளிர்ந்த உள்ளத்தழகி. /
மாம்பழக் கன்னத்திலே நான்
மயங்கினேனடி அழகி /
கீற்றுப் போல் பாட்டழகி/
கிளி போல் பேச்சழகி./
அசைந்து வரும் மயிலழகி ./
நாணத்திலே தலை குனியும் நாற்றழகி/
நாள் தோறும் எனை மயக்கும்
குவளை மலர் கண்ணழகி/