தொலைந்த சுதந்திரம்
யார் சொன்னது சுதந்திரம் இல்லை என்று /
நாடு எங்கும் சுதந்திரம் உண்டு /
கொள்ளையர்களுக்கு சுதந்திரம் உண்டு /
கொடூரமானவனுக்கு சுதந்திரம் உண்டு /
காமோதரனுக்கு சுதந்திரம் உண்டு /
ஊழல் செய்வோருக்கு சுதந்திரம் உண்டு /
போலி மருத்துவத்துக்கு சுதந்திரம் உண்டு /
பொய்யான வாக்குறுதியை அள்ளி வீசுவோருக்கு சுதந்திரம் உண்டு /
தமிழுக்கு விடுதைலை கொடுக்கும் ஆங்கில மொழிக்கு சுதந்திரம் உண்டு /
சட்டத்தை மிதித்த வாறு வலம் வரும் காவல் துறைக்கு சுதந்திரம் உண்டு/
அயல் நாட்டு இறக்குமதி பொருளுக்கு சுதந்திரம் உண்டு /
இத்தனையும் நாம் அறிந்து கொண்டு /
சுதந்திரம் இல்லாத நாடு என்று கூறலாமோ நின்று கொண்டு /