இதுதான் உண்மை


முற்றும் துறந்தேன்-
ஓடி வந்து
தன் அங்கியை
ஆடையாக உடுத்தினார்
இயேசு...
ஞானப் பழத்தோடு
ஓடி வந்தார்
முருகன்.
ஆச்சரியமாகப் பார்த்தேன்
சொன்னார்:
“அப்போதே அண்ணன்
கொடுத்து விட்டார்”
பாபர் மசூதியிலிருந்து
நபியும் ராமனும்
பால் சொம்போடு
புறப்பட்டதாகப்
புத்தர் சொன்னார்.

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (20-Aug-11, 5:57 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 513

மேலே