நீர்இன்று அமையாது உலகெனின் நீஇன்றி விடியாது என் காலைப்பொழுது

உனது பொல்லாத நினைவலைகள்
காதலெனும் கடலுக்குள் எனை இழுத்துச் சென்றபின்...

எனது அளவற்ற காதலால் மூச்சுத்திணறல்
ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கி கொண்டு
இருந்த வேளையில்...

உன் சூடான முத்ததினால் எனக்கு முதலுதவி செய்தமைக்காக நன்றி சொல்ல கண் விழித்தேன்...

- முட்டாள் பெண் எனக்கு அப்பொழுது தான்
புரிந்தது கண்டவை யாவும் சொப்பனம் என்று... ( வெகுளி புன்னகையோடு எழுந்தேன் படுக்கையைவிட்டு உனை காணும் ஆர்வம் கொண்டமையால் )

எழுதியவர் : நரி (23-Sep-18, 3:00 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 96

மேலே