வா அன்பே வா
கைக்குட்டையிலும்
உன் பெயரைப் பதித்தேன் /
தலையணையிலும் உனது
பெயரைப் பதித்தேன் /
எழுத்து வடிவம் பெறவே /
வெள்ளைக்காகிதத்திலும் /
கிறுக்கும் போது உம்முடைய
பெயரையே கிறுக்கி ரசித்தேன் /
உள்ளக் கிடங்கிலே
அதிகமான ஆசை வெள்ளம் /
அதற்குள் பிம்பமாய் உந்தன் முகம் /
ராத்திரித் தூக்கத்திலே வந்து
உசுப்பி விடும்
எத்தனையோ கனவுகள் /
அத்தனையும்
கூறுவதோ உன் கதைகள் /
இது வரை
நித்திரை பறித்தது போதும் /
அத்தனைக்கும் சன்மானமாய் /
மொத்தமாய்
உன்னைக் கொடுத்து விடு /
மண்ணோடு ஊடுருவி ஓடும் /
நீர் போலே சேர்ந்தே வாழ்ந்திடலாம் /
கல்லில் செதுக்கிய சிற்பம் போல்/
நிலைத்து வாழ்ந்திடலாம் /
தரை தொட்ட பின்னும் /
கடலைப் பிரியாத
அலைபோல் வாழ்ந்திடலாம் /
கண்ட கனவை நிஜமாக்கி /
கனிந்த காதலைக் காவியமாக்கி /
களிப்புற்று நாம் படித்து /
இன்புற மகிழ்வோடு வாழ்ந்திடலாம் /
வா அன்பே வா விரைந்து வாஅன்பே வா/