அரக்கன்

" சார் இதெல்லாம் ரொம்ப அநியாயம் சார்.
என் கிட்ட எல்லா பெப்பர்ஸும் சரியா இருக்கின்றன.
காசு கேட்கிறது. சரியில்ல. சார். ",என்று டிராபிக் கான்ஸ்டேபிளிடம் கேஞ்சிக் கொண்டிருந்தான் ஆனந்த்.

" எல்லா பேப்பர்ஸும் இருந்தால் ஓவர் ஸ்பீடுல வருவியோ?
இங்கே பைன் கட்டூனா நூறு.
இல்லனா, கோர்ட்டுல வண்டியை வந்து எடுத்துக் கோ. ", என்றார் டிராபிக் கான்ஷ்டெபிள்.

" இதெல்லாம் அடுக்காது சார்.
நான் 40 கிலோமீட்டர் ஸ்பீடுமேல வரல.
இப்படி பொய் சொன்னீங்கனா அந்த தெய்வத்திற்கே அடுக்காது சார். ",என்று கூறிக் கொண்டே நூறு ரூபாயைத் தேடிப்பிடித்து கொடுத்தான் ஆனந்த்.

" எந்த தெய்வம்? கொவில்ல நட்டு வைச்சுருக்காங்களே அந்த கல்லா?
அட போடா வெண்ணேய்! ",என்று திட்டியவாறு கிளம்புமாறு சைகை செய்தார் ஆனந்தைப் பார்த்து.

ஆனந்த் சிறிது நகர்ந்து முன்னேறி சொல்ல " டமார். ", என்ற சத்தம்.
டிராபிக் கான்ஸ்டெபிளின் வாகனம் சிதறியது.
அதிர்ந்த ஆனந்த் திரும்பி பார்த்தான்.
லாரி ஒன்று தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்திற்குள் உருண்டது.
டிராபிக் கான்ஸ்டெபிள் பயங்கரமாக அடிபட்டுக் கிடந்தார்.
சுற்றிலும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை.

அவ்வழியாக செல்லும் எல்லாரிடம் லஞ்சம் வாங்கியவன் தன் உயிரைக் காக்க யாருக்கு லஞ்சம் கொடுப்பான்?
அந்தக் கடவுளுக்கா?
கொடுத்தால் காப்பாற்றிவிடுவாரா?

ஆனந்திற்கு பாவமாகத் தொன்றியது.
காவல்துறைக்கு கால் செய்துவிட்டு, அவசர ஊர்தியை அழைத்தான்.
அவசர ஊர்தி வருவதற்குள் அதிக இரத்தம் வெளியேறாமல் தடுக்க தனது சட்டையை கிழித்து கட்டினான்.
சுற்றி இருந்தவர்கள், ஆனந்தை நோக்கி, " நீங்க பாம்புக்கு பால் வார்க்கிறீங்க.
தேவையில்லாமல் காப்பாற்ற முயற்சிக்காதீங்க.
பணப் பேய் சாகட்டும். ",என்றார்கள்.

நீங்களெல்லாம் மனிதர்களா?
மனிதத்தன்மை இல்லாத மிருகங்கள் என்று கூறிக் கொண்டே இரத்தம் வெளியேறாமல் கட்டுப் போட, அவசர ஊர்தி வந்து சேர்ந்தது.

டெக்சரில் வைத்து தூக்கிக் கொண்டு போகும் போது, நன்றி உணர்வோடு ஆனந்தை பார்த்த பார்வை நிலைக்குத்திவிட்டது.
உயிர் பிரிந்தது.

மருத்துவமனையை அவசர ஊர்தி அடைய கையை பிடித்து பார்த்த மருத்துவர், " இவர் இறந்துவிட்டார். ",என்றார்.
போஷ்ட்மார்டன் செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிராபிக் கான்ஷ்டெபிள் கணேஷ் மீது மோதிய லாரியை பள்ளத்தில் இருந்து காவல்துறையினர் மீட்டனர்.
அதன் டிரைவரை காணவில்லை.
அவர் இறந்திருந்தால் அவருடைய உடல் கிடைத்திருக்கனிமே.
எங்கோ தலைமறைவாகிவிட்டார் என்று தெரிய காவல் துறை விசாரணையைத் தொடங்கியது.

இரண்டு நாட்கள் கழிந்திருந்து அந்த லாரி டிரைவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
தனது லாரி ஒருவாரத்திற்கு முன்பே திருடு போனதாக அவர் காவல் துறையிடம் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அப்போ உண்மை கொலையாளி யார்? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது.
விபத்து முன் அந்த லாரி எங்கெல்லாம் சென்றது, நின்றது என்பது பற்றிய சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் சிக்கின.

விபத்துக்கு காரணமான கொலையாளியை நெருங்கி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில் அதே போல் மற்றொரு விபத்து சம்பவம் நடக்கிறது.
இந்த விபத்தில் ஒரு டிராபிக் இன்ஷ்பெக்டர் கொல்லப்பட்டார்.
லாரியோடு ஒரு வீடியோ கேமராவும் சிக்கியது.
லாரி டிரைவரைக் கண்டறிந்து விசாரித்தில் முன்பு பதிவான அதே வாக்குமூலம்.
தனது லாரி ஒரு வாரத்திற்கு முன்பே திருடு போய்விட்டது எனவும் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதும் தெரியவர, காவல்துறையினர் இரண்டு விபத்துகளை ஏற்படுத்தியதும் ஒரே நபராகத் தான் இருக்க வேண்டும் என நினைத்து அந்த வீடியோ கேமராவை ஆராய்ந்தனர்.

அதில் அந்த டிராபிக் கான்ஸ்டெபிள் மற்றும் டிராபிக் இன்ஸ்பெக்டர் நடத்திய வழிப்பறி கொள்ளைகள் பதியப்பட்டு இருந்தன.

கொலையாளியை வேகமாக பிடிக்க வேண்டுமென அலோசித்த காவல் துறை தலைமை திறமையாக காவல் துறை அதிகாரியான பத்மநாபனை நேமித்தது.

அவரும் பல இடங்களில் விசாரணை செய்து கொண்டிருந்தார்.
ஒரு இடத்தில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று திரும்பி வந்து பார்க்கையில் அவருடைய வாகனமே திருடு போய் இருந்தது.

அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது,
சிலர் சரியாக கவனிக்கவில்லை என்றார்.
சிலர் தெரியாது என்றனர்.
கடைக்கு முன்பு அமர்ந்திருந்த ஒருவர் மட்டும் நடந்தது என்னவென்று கூறினார்.

" நீங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற சில நிமிடங்களில் உங்கள் கார் Start ஆகி அங்கிருந்து சென்றுவிட்டது சார் ", என்று அவர் கூறி துப்பில், பத்மநாபனுக்கு பொறி தட்டியது திருடன் தன் கூடவே வந்திருக்கிறான் என்று.

காவல் துறை மேலிடத்திற்கு தகவல் கொடுக்க காவல் துறை வாகனத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

கண்டுபிடிக்கப்படவில்லை.
காவல்துறை வாகனம் திருடு போய்விட்டது என்ற செய்தி வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்து பிரதான சாலையில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிப்பட்டு இருந்தது.

போக்குவரத்து துறை அமைச்சர் வரதராஜன் அவ்வழியாக செல்வதாகத் தகவல்.
குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
"வீல் வீல் வீல் ",என்று காவல் துறை வாகனம் முன் செல்ல பின்னால் பல கார்கள் பின் தொடர்ந்தன.

மேம்பாலத்தில் வந்துக் கொண்டிருந்த போது,
சற்று உயரமான பக்கத்து மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை ஒரு வாகனம் வேகமாக பாய்ந்தது.
அது திருடு போன காவல்துறை வாகனம் தான்.
பாய்ந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த குறிப்பிட்ட கார் மேல் மோதியதும், " டமார், டுமீர் ",என்ற பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அமைச்சர் வரதராஜன் கொல்லப்பட்டார்.
அதற்கு காவல்துறை வாகனமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது குறித்த சிசிடிவி வீடியோகள் ஆதாரங்கள் மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டன.
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட காவல்துறை நிலைமை கட்டுக்குள் கொண்டுவர திக்குமுக்காடியது.

(தொடரும்...)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Oct-18, 10:29 pm)
Tanglish : arakkan
பார்வை : 430

மேலே