வெண்முரசு புதினம்---------------------வெண்முரசு சென்னை கலந்துரையாடல் அக்டோபர் 2018

வெண்முரசு மொத்த மகாபாரதத்தையும் மறுபுனைவு செய்து தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்டுவரும் நவீன தமிழ் நாவல் வரிசை. ஜெயமோகனால் அவரது இணையதளத்தில் 2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, தினமும் ஒரு அத்தியாயம் வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது.தமிழில் விமர்சகர்கள் கூறிய பிறகே நாவல்கள் பெரும்பாலோரால் வாசிக்கப்படும். ஆனால் இந்த நாவல் அதன் கவர்ச்சியால் எழுதப்படும் சமகாலத்திலேயே பெரும் வாசக வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கான அறிவிப்பில் [1] ஜெயமோகன், இந்நாவல் ஐந்நூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள் உடையது இது எனச் சொல்லியிருந்தார். அதை பத்தாண்டுகள் எழுதுவேன் எனவும் கூறியிருந்தார். ஆனால் நாவல் எழுத ஆரம்பித்த பிறகு மகாபாரதத்தின் விரிவு காரணமாக, நூல் எண்ணிக்கை 25லிருந்து 30வரை செல்லலாம் என்று தற்போது கூறியிருக்கிறார். அப்படி எழுதி முடிக்கப்படும் நாவல் 25000பக்கங்கள் கொண்டிருக்கும் என்றும் சொல்கிறார்.இதன்படி நிறைவடையும் பொழுது வெண்முரசு, உலக இலக்கியத்தின் மிகப்பெரிய நாவல் வரிசையாகி இருக்கும்.

வியாசரின் மகாபாரதத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளாமல், மகாபாரதக் கதைகளையும் கதை மாந்தர்களையும் வெவ்வேறு விதமாக மொழிந்துள்ள அனைத்துப் புராண, நவீன மற்றும் நாட்டார் பிரதிகளையும் கணக்கில் கொண்டு சொல்வது இது . கதை பழையதாயினும், பலமுறை பல்வேறு ஆசிரியர்களால் சொல்லப்பட்டிருந்தாலும், முற்றிலுமாக ஒரு நவீன புனைகதை ஆசிரியனுக்கான மொழிபுகளும் சவால்களும் கொண்டு அமைந்துள்ளது.

இந்நாவல் தினந்தோறும் அவரது இணையத்தளத்தில் ஒரு நாளின் தொடக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. இந்நாவலுக்கென்றே தனியாக ஓவியத்தை வரைபவர் ஓவியர் ஷண்முகவேல் ஆவார். கிழக்கு பதிப்பகம் ஜெயமோகன் எழுதும் மகாபாரத நாவலான வெண்முரசின் அனைத்து நாவல்களையும் சாதாரணப் பதிப்பாகவும் சேகரிப்பாளர்கள் பதிப்பு எனும் செம்பதிப்பாகவும் வெளியிடுகிறது.

இந்தப் பெருநாவல், பதிமூன்று நூல்கள் கடந்து பதினான்காவது நாவலான நீர்க்கோலம் ஜெயமோகன் தளத்தில் இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

அக்டோபர் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது

கடந்த மாதம் நிகழ்ந்த சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக ஜா. ராஜகோபாலன் உரையாடினார். அந்த உரையாடல் மிகச்செறிவானதாகவும் சொல்வளர்காடு நாவலை அணுக ஒரு வழிகாட்டியாகவும் இருந்தது. ஆனால் அனைத்து குருகுலங்கள் பற்றியும் ஒரே அமர்வில் உரையாட இயலாததால் நேரம் கருதி உரையாடியவரை நிறுத்திக்கொண்டோம். அந்த உரையின் தொடர்ச்சியாக ஜா.ராஜகோபலன் இந்த வாரமும் உரையாற்றுவார்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:- வரும் ஞாயிறு (21/10/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505 & 9043195217

எழுதியவர் : (19-Oct-18, 7:40 pm)
பார்வை : 28

மேலே