ஏமாற்றப்பட்டவர்கள்

முன்னுரை
காதலில் நம்பிக் கெட்ட ஆண்களும் பெண்களும் பலருண்டு . சில பெண்களுக்கு ஏமாற்றங்கள் சவாலாக அமைகிறது அதோடு ஒரு படிப்பினையாகவும் அமைகிறது .அந்தக் கருவில் இது சற்று யதார்த்தமான கதை
சங்கீதாவின் அம்மா திலகவதி வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்கள் பல. அவைற்றில் திலகவதியோடு படித்த சினேகிதி மாலா பணம் இல்லாமல் படிக்கச் கஷ்டப் படும்பொது திலகவதி கொடுத்த பெரும் தொகையான பணத்தோடு ஊரை விட்டு டெல்லிக்கு போனவள் போனவள்தான்.. அதோடு அவளோடு திலகவதிக்குத் தொடர்பு அறுந்தது அது அவள் வாழ்வில் சந்தித்த முதல் ஏமாற்றம். அதன், பின் பி கொம் இறுதிப் பரீட்சசையில் முதலாம் தரத்தில் சித்தி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து . இரண்டாம் தரத்தில் சித்தியடைந்தாள் . அதை சவாலாக ஏற்று தொடர்ந்து படித்து எம் பி ஏ ( MBA) பட்டம் பெற்றாள். மூன்றாவது ஏமாற்றம் தான் ஆசைபட்ட வேலை பிரபல தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தாள். தன்னை நேர்காணலில் முதலாவதாக தேர்வு செய்த நிறுவனத்தின் அதிகாரிகள் இறுதியில் அரசியல்வாதி ஒருவரின் அழுத்தத்தால் அவரின் மகளுக்கு, அதுவும் திலகவதியின் சினேகிதி வனிதாவுக்கு வேலையை கொடுப்பார்கள் என அவள் எதிர்பார்கவில்லை இவைகளில் இறுதியில் அவள் வாழ்வில் ஏற்றபட்ட மிகப் பெரிய ஏமாற்றம் அவளை வெகுவாகப் பாதித்து விட்டது .
தன் பெற்றோர் சுந்தரமும் பார்வதியும் வெளி நாட்டில் பொறியிலாளனாக வேலை செய்யும் மாதவன் என்பவனுக்கு பேசி வந்த திருமணத்துக்கு உடன் படாது தான் உயிருக்கும் மேலாக இரு வருடங்கள் காதலித்து , தன்னோடு ஒன்றாகப் பல்கலைக்கழகத்தில் படித்த தன் காதலன் ராம்குமார் தன்னை ஏமாற்றி தனக்குச் சொல்லாமல் பிற நாட்டுக்கு போனது அவளுக்கு மிகப் பெரும் ஏமாற்றம் எந்த நாட்டுக்கு அவன் சென்றான் என்ற என்ற விபரம் கூட அவலாள் கண்டுபிடிக்க முடியவில்லை . அவன் அப்படிச் சொல்லாமல் போனாலும் பறவாயில்லை அவன் தன்னை விட்டுப் பிரிந்து போகும்போது தன் வயிற்றில் மூன்று மாத சிசுவை சுமையாக விட்டு அவன் செல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இரு வருட நட்பின் பரிசு அது. தன் வயற்றில் ஒரு சிசு வளர்வது அவன் புலம் பெயர்ந்து போன பின்பே அவளுக்குத் தெரியவந்தது.
ராம்குமார் திலகவதியயை எமாற்றி விட்டுய் போக இரு மாதங்களுக்கு முன் . அந்த சம்பவம் நடந்தது அன்று ஒருநாள் “அரங்கேற்றம்” என்ற படம் பார்த்து விட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபட, நடந்து வீடு திரும்பும் போது திடீர் என்று இடி மின்னலுடன் மழை கொட்டத் தொடங்கியது. இருவரும் மழையில் நனைந்த படியே ஆள் நடமாற்ற, கட்டி முடியாத ஒரு கட்டிடத்தின் கீழ் ஒதுங்கி நின்றார்கள். மழையில் நனைந்த திலகவதியின் உடலோடு ஒட்டிய வொயில் சாரி அவளின் உடல் அழகை ராம்குமாருக்கு கவரச்சியாகக் காட்டியது . அதே மாதிரி மழையில் தோய்ந்த சேரட்டோடு நின்ற ராம்குமாரின் தேகத்தின் அழகு திலகவதியின் மனதில் ஒரு வித மனக் கிளர்ச்சியை கொடுத்தது. இருவரும் தங்களை மறந்தார்கள். அந்த இடி மின்னலில் இருவரும் தங்களை அணைத்துக் கொண்டு முத்தமிட்டார்கள். திலகவதி சில நிமிட சிற்றின்பதுக்காக தன் கற்பை இழந்தாள். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மனிதனை தவறு செய்ய வைக்கிறது. அதன் பின்னரே தன் தவறை மனிதன் உணருகிறான் அன்று தான் அந்த கட்டிடத்தில் திலகவதி தன் கற்பை ராம்குமாருக்குப் பறிகொடுத்தாள் . அந்த சம்பவம் நடந்து சில வாரங்களுக்குள் ராம் குமார் திலகவதிக்குச் சொல்லாமல் வேறு தேசத்துக்கு புலம் பெயர்ந்தான் . அவன் போகும்பொது திலகவதிக்கு அவள் வயிற்றில் சிசுவை துணைக்கு விட்டுசெல்கிறான் என்று தெரியாது . அந்த மிகப் பெரிய தவறை தன் நிலை மறந்து செய்த தவறுக்கு திலகவதி மிகவும் மனம் வருந்தினாள். இரு வருடங்களாக தான் காதலித்த காதலன் ராம்குமார் தன்னை இப்படி ஏமாற்றி விட்டு தன்னில் ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டு சொல்லாமல போவான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை
***
முற்போக்கு கொள்கை உள்ள பிரபல எழுத்தாளினியான அவளின் தாய் பாரவதியும், தந்தை பார்த்திபனும் அவளைத் தேற்றி “ திலகா நடந்தது நடந்து விடடது . இருவரிலும் தவறுண்டு. இனி இதை சவாலாக எடுத்து உன் குழந்தையை வழர்க்கப் பார். இனியாவது ஒருவரையும் நம்பாதே” என்றார்கள்.
திலகவதி திருமணமாகாமல் தன குழந்தை சந்கீதாவோடு வாழத் தீர்மானித்தாள். பெற்றோரும் அவளை திருமணத்துக்கு வற்புருத்தவில்லை சமூகத்தில் பல வித விமரசனங்களை அவள் எதிர்நோக்க நேர்ந்தது. அவை அவளுக்கு ஒரு சவாலாக அமைந்தது . கீறும் கேளாத மாதிரி நடந்தாள் இனி தான் திருமணம் செய்யப் போவதில்லை என்றும் சங்கீதாவை நாள் ஒழுக்கம் உள்ள பெண்ணாக வழர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்து., அவளை கட்டுப்பாட்டுடன் வளர்த்தாள். .
****
தந்தை பார்த்திபனின் மறைவுக்குப் அவர் நடத்திய ஆடைகள் தைத்து வெளி நாடுகளுக்கு ஏற்றமதி செய்யும் “திலகாஸ் ஆடைகள்: (Thilaga’s Garments) என்ற தன் பெயரில் தந்தை உருவாக்கிய ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமைக்காரியானாள் திலகவதி . அந்த நிறுவனத்தில் சுமார் நூறு பேர் வேலை செய்தனர். பல மேற்கத்திய நாடுகளில் அவளின் நிறுவனத்தில் தாயரிக்கும் ஆடைகளுக்கு நல்ல மதிப்புண்டு. அவளின் நிறுவனத்தில் ஆடைகள் தைக்கும் பெண்கள் சிலர் அவளைப் போல் ஆண்களால் எமற்றப்ப்டவர்கள் திருமணமாகாத அவர்களுக்கு பிள்ளைகளுண்டு . வாழ்கையில் . ஏமாற்றப்பட்ட அவர்களுக்கு தனி சலுகைகள் திலகவதி வழங்கினாள் . அவர்களின் பிள்ளைகளின் படிப்பு, ,வைத்திய செலவு, ஆடை ஆகியவற்றை அவளின் நிறுவனம் ஏற்றது.
தனக்கு பின் தன்னைப் போல் எம் பி ஏ படித்து சந்தை படுத்தும் புதிய முறைகளைக் கற்ற அவளின் மகள் சங்கீதா திலகாஸ் நிறுவனத்தின் மார்க்கடிங் டிரெக்டரானாள் ஆண்களால் ஏமாற்றப் பட்ட பெண்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்பதே திலகவதியின் குறிக்கோள். வியாபார விசயமாக பலதடவை கனடா , இங்கிலாந்து அவுஸ்திரேலியா , அமெரிக்கா ஆகிய தேசங்களுக்கு சங்கீதா போய் வந்தாள்
தன் நிறுவனத்தின் ஆடைகளை விற்பனை செய்ய கனபா
டொராண்டோ நகரில் உள்ள பெனிங்டன்,. பே, வோல்மார்ட்., லோரா, மார்க்ஸ், மார்ஷல்ஸ் ( Pennington, Bay, Wall Mart, Laura . Marks, Marshals). போன்ற ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, பல ஒப்பந்தங்களில் கைச்சாத்து பெற்று வந்தது திலகவதிக்கு பெருமையாக இருந்தது. அதே நேரம் கனடாவுக்குப் போய் திரும்பிவந்த சங்கீதாவின் பேச்சில் ஒரு மாற்றத்தையும் கண்டாள். திலகா தன் மகளைக் கண்டிப்பாக வளர்த்ததாள் சந்கீதாவோடு அதிகம் பேசுவதில்லை காரணம் எந்த ஒரு வாலிபனோடு சங்கீதா சினேகிதமாக இருப்பதைத் திலகவதி விரும்பவில்லை. தனக்கு நடந்தது போல் தன் மகளுக்கும் நடந்து விடக் கூடாது என்ற பயம் திலகாவுக்கு . சங்கீதா தன தந்தை பற்றி விசாரிக்கும் போது: உன் அப்பா ஆர்மியில் மேஜராக இருந்தவர். பாகிஸ்தானோடு நடந்த போரில் இறந்து விட்டார் என்று முழு பொய் சொல்லி நடந்த உண்மையை மறைத்து விட்டாள். வீட்டில் ராம்குமாரின் படம் ஒன்றும் சங்கீதாவின் கண்களுக்கு தெரியாதவாறு திலகவதி செய்துவிட்டாள் அதனால் சந்கீதாவுக்கு தெரியாத அவளின் தந்தை பற்றிய இரகசியத்தையும், திலகாவின் வாழ்வில் நடந்த சம்பவத்தை பாட்டி பார்வதி சங்கீதாவுக்கு சொல்லி, அதை எக்காரணம் கொண்டும் தாயுக்குத தான் சொன்னதாக அதை சொல்லக் கூடாது என்று வாக்குறுதி பெற்றாள்.
கனடாவில் பலரை சங்கீதா சந்தித்தவர்களில் வோல் மார்ட் கொம்பனியின் ஜெனரல் மனேஜரான வில்லியமும் ஆசிரியையாக இருக்கும் அவனின் தாய் ஜேனும் இருவர் . ஒரு நாள் சங்கீதாவை தன் வீட்டுக்கு இரவு போசனத்துக்கு வில்லியம் அழைத்துச் சென்று தாய் ஜேனை சங்கீதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். ஜேன் சங்கீதாவின் பெற்றோரை பற்றி விசாரித்த பொது அவளுக்கு தன் பாட்டி தனக்கு சொன்னதை சொன்னாள். அதற்கு ஜேன் “சங்கீதா நானும் உன் அம்மாவும் ஒரே படகில் பயணம் செய்கிறோம் (Myself and your mum are both are Travelling in the same boat) என்றாள் ஆங்கிலத்தில் இரட்டைப்பட அர்த்தத்தோடு சந்கீதாவுக்கு. . ஜேனும் தானும் ஒருவனால் ஏமாற்றப்பட்டவள் என்றும் . அவளுக்குப் பிறந்த ஒரே மகன் தான் வில்லியம்ஸ். என்ற விபரம்சொன்னாள். மேலும் விபரம் சொல்ல ஜேன் சொல்ல் விரும்பவில்லை . சங்கீதாவும் கேட்க விருப்பப்படவில்லை
கனடாவில் சந்கீதா இருந்த இரு மாதங்களில் சந்கீதாவும் வில்லியம்சும் நெருங்கிய நண்பர்களானார்கள் . அந்த சில வாரங்களில் அவரகள் இருவரும் ஒருவரை ஓருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். ஜேனுக்கும் தன் மகன் சங்கீதாவை காதலித்த்தில் ஆட்சேபனை இருக்கவில்லை. ஆனால் அவள்ஒரு நிபந்தனை மகனுக்கு விதித்தாள். :”வில்லியம் நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் சங்கீதாவை விட்டு பிரிந்து போக கூடாது “ என்பதே அந்த நிபந்தனை . வில்லியம்சும் தாயுக்கு சத்தியம் செய்து கொடுத்தான்.
****
சங்கீதா ஊர் திரும்பியதும் நடந்த விசயத்தை பாட்டி மூலம் தாயுக்கு சொல்லி வில்லியம்சசை தான் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தாள். சங்கீதாவின் திருமணத்துக்கு திலகா சம்மதித்ததுக்கு முக்கிய காரணம் ஜேன் தன்னைப் போல் ஏமாற்றப்பட்டவள் என்பதே.
****
சங்கீதாவின் திருமணத்துக்கு ஒரு கிழமை இருக்கும் போது திலகாவுக்கு ஒரு அவசரத் தந்தி சிங்கப்பூரில் இருந்து ராஜா அண்ட் கொலின் (Rajah & Colins Partners) சட்டத்தரணிகளிடம் இருந்து ஓரு அவசர கேபில் வந்தது அதில்
“ ராம்குமார் சீரியஸ் விரைவில் வரவும்: தொடர்புக்கு ( தொலை பேசி எண் ராஜா (65) 6868 3030 என்று கேபிலில்இருந்தது . தாமதிக்காமல் திலகா சட்டரணி ராஜாவோடு பேசினாள். அவர் சொன்னபடி ராம்குமாருக்கு இன்னும் சில நாட்களே வாழ்வு என்று சொல்லி. ராம் குமார் . இரத்தப்புற்று நோயினால் அவர் கடந்த ஒரு வருடமாக பதிபப்டிருந்தார் என்று ராஜ் திலகாவுக்கு சொன்னார்.
தாமதிக்காமல் அடுத்த நாளே திலகாவும், சங்கீதாவும் சிங்கப்பூருக்குப் புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் இருவரையும் விமான நிலையத்தில் ராஜ் சந்தித்து மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றார்.
நகுல் வைத்தியசாலையின் புற்றுநோயாளிகளின் வார்டில் ஒரு அறையில் ராம்குமார் அடையாளம் காணமுடியாத வாரை உடல் மெலிந்து, கன்னங்கள் குழி விழுந்திருந்தது அவரின் மூச்சுக்குழாயில் துளையிட்டு செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு இருந்தது அவர் அசையாது கண்களை மூடியபடி கிடந்தார்.
: டாக்டருக்கு திலகவதியும் சங்கீதாவும் வந்த செய்தி போனது, டாக்ட்ப்ர் சில நிமடங்களில் வார்டுக்கு வந்தார்.
‘ டாக்டர் எவ்வளவு காலம் இவரின் ஊயிர் நிற்கும்” திலகா கேட்டாள் :
: எங்கள் கணக்குப்படி இன்னும் சில மணி நேரம் மட்டுமே இவர் இருப்பார் இவருக்கு வந்திருக்கும் இரத்தபுற்று நோயுக்கு வைத்தியம் கிடையாது . உங்கள் இருவரையும் அடையாளம் காண்பாரோ தெரியாது: என்ற டாக்டர்.
ராஜா ராம்குமாரின் காதுக்கே பொய் “ராம் உமது திலகாவும் மகளும் இந்தியாவில் இருந்து . வந்திருகிறார்க்கள் உம்மை பார்க்க. ராஜ சொன்னதைகே கேட்டோ என்னவோ ராம்குமார் சற்று கண் விளித்து பார்த்தார்.
அவரின் உதடுகள் பேசத் துடித்தன ஆனால் அவரால் பேச முடியவில்லை . கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது . தன இரு கரங்களையும் கஷ்டப்பட்டு தூக்கி கூப்பி இருவரையும் வணங்கிய பின் அருகில் இருந்த மேசையி இருந்த கடித உறையைச் சுட்டிக் காட்டினர். ராஜாவுக்கு புரிந்து விட்டது அவர் . கவரில் உள்ள உயிலை எடுத்து வாசித்தார்.
: என் அன்பின் இரு காதலிகள் திலகாவுக்கும் ஜேனுக்கும் ராம்குமார் சுய நினைவோடு எழுதும் உயில் இது: உங்கள் இருவரையும் நான் என் இளமை காலத்தில் ஏமாற்றி விட்டேன். நான் மன்னிக்க முடியாத பாவி. என் இளமைத் துடிப்பில் நான் செய்த மாபெரும் குற்றங்கள் இவை . கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார் எனது சொத்துகள் முழுவதும் உங்க இருவருக்கும் உங்களுக்கு இருவருக்கும் நான் தந்த பிள்ளைகளுக்கும் போய் சேரும். என்னை நீங்கள் இருவரும் நான் செய்த பிழைகளுக்கு மன்னித்து விடுங்கள்:” உயிலை ராஜா வாசித்து முடித்த பின் திலகவதியால் பேச முடிவில்லை. சங்கீதா உறைந்து போய் நின்றாள். .” அப்போ என் தம்பியையா நான் காதலித்தேன் “?,: என்று வாயுக்குள் முணுமுணுத்தாள். அவளால் அதை நம்ப முடியவில்லை. ராம்குமாரின் உயிர் பிரிந்தது. டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு ராம்குமாரின் மூச்சு நின்று விட்டதாக அறிவித்தார் .. திலகவதியும் சங்கீதாவும் இறந்த ராம்குமாரின் இரு பக்கத்திலும் அசையாது கிடந்த இரு கைகளையும் பிடித்த படியே சுப்பிரபாதம் சொன்னார்கள்.
****