விவசாயி
விவசாயி
வியர்வையை விதையாக்கி
வெறும் நிலங்களை எல்லாம் உயர் நிலங்களாய் மாற்றி
உயிருடன் எங்கள் உழைப்பையும் விதைத்து
உருவாக்கப்பட்ட பின்பும் பசுமையாய் தெரிவது
எங்கள் நிலங்கள் மட்டும்தான்
எங்கள் உள்ளங்களிலும் சரி
எங்கள் உயிரிலும் சரி
நாங்கள் பெற்றது பசுமை அல்ல பஞ்சங்கள்
நீங்கள் உண்பதற்கு உயிர்கொடுத்து நங்கள் விதைத்த
பயிர்கள் எல்லாம் தலைநிமிர்ந்தது
உருவாக்கிய எங்களின் நிலை
உயிரின்றி இன்று தலை சாய்ந்தது
கேட்பதற்கு நாதியும் இல்லை
நாட்களும் இல்லை
அறுவடை செய்வது மட்டுமே எங்கள் பாக்கியம்
அள்ளி தின்பதற்கு வக்கில்லை
எங்கள் நிலைமையை எடுத்துச்சொல்லி
வாதிடுவதற்கு எங்களுக்கு வக்கீலும் இல்லை
விவசாயி பெற்ற வம்சம்
விஷம் குடித்தே அழிகிறது
விதியே இதனை நினைத்து அழுகிறது
BY DEAR GUYS
ABDUL BACKI.K

