பிறர் வியக்க வாழு
விழுந்துவிட்டோமென்று
வியந்து கிடக்காதே!
எழுந்துவிட்டோமென்று
துணிந்து நிற்காதே!
நடந்துவிட்டோமென்று
கடந்து நிற்காதே!
பறக்கமுடியுமென்று
உயர்வை தொலைக்காதே!
யாருமில்லையானாலும்
தன்னம்பிக்கை இழக்காதே!
பத்துவிரல்போதும்
பிறர்வியக்க வாழ்வதற்கு!!

