எளிய முறையில் தமிழ் படித்து எழுதி சுவைக்கலாம் வாங்க

பாகம் 4

தமிழ் மொழியில் ஏற்படும் பிழைகளை நீக்கும் வழிகள்
முதலில் மாணவர்களுக்கு குறில் எழுத்துகளை மட்டும் கற்பித்து அதன் பிறகு அந்த ஒவ்வொரு எழுத்துகளுக்கும் தனித்தனியாக அவர்களுக்குத் தெரிந்த படங்களுடனும், அவர்களுக்கு தெரிந்த சொற்களுடனும் இணைத்துப் பயிற்றுவித்தால் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
அதனைப் பார்க்கலாம்.

1 குறில் எழுத்துகள்:
உயிர் குறில் எழுத்துகள் (5) (ஐந்து)
அ, இ. உ, எ, ஒ முதலியன.

குறில் எழுத்துகளாயின் அதனுடன் கரம் சேர்த்தோ, (அதாவது அகரம், இகரம், உகரம், எகரம், ஒகரம் என்று)
(அல்லது) னா சேர்த்தோ (அ-னா, இ-னா, உ-னா, எ-னா, ஒ-னா என்று) குறிப்பிடுவது வழக்கம்.

2.நெடில் எழுத்துகள்:

உயிர் நெடில் எழுத்துகள்: (7) (ஏழு)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ முதலியன.

நெடில் எழுதுகளாயின் அதனுடன் காரம் சேர்த்தோ, (அதாவது, ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஓகாரம், ஔகாரம் என்று)
(அல்லது) ன்னா சேர்த்தோ (அதாவது ஆன்னா, ஈன்னா, ஊன்னா, ஏன்னா, ஐயன்னா(குறிப்பு ஐக்கு மட்டும் இவ்வாறு –யன்னா- என்று வரும்),
ஓவன்னா, ஔவன்னா(குறிப்பு ஓ,ஔ ஆகியன மட்டும் இவ்வாறு –வன்னா- என்று வரும்) என்று குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால் இவை தற்சமயத்தில் பெரும்பான்மையான இடங்களில் பயன்படுத்துவதில்லை.

பிழை நீக்கும் பயிற்சி பாகம் 5

1 உயிர் குறில் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் இணைந்துவரும் உயிர்மெய்க் குறில் வாய்பாடுகளை மட்டும் கற்பித்தல்.

(எடுத்துக்காட்டுகள்)

ககர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
க்+அ=க
க்+இ=கி
க்+உ=கு
க்+எ=கெ
க்+ஒ=கொ

ஙகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ங்+அ= ங
ங்+இ=ஙி
ங்+உ=ஙு
ங்+எ=ஙெ
ங்+ஒ=ஙொ

சகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ச்+அ=ச
ச்+இ=சி
ச்+உ=சு
ச்+எ=செ
ச்+ஒ=சொ

ஞகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ஞ்+அ=ஞ
ஞ்+இ=ஞி
ஞ்+உ=ஞு
ஞ்+எ=ஞெ
ஞ்+ஒ=ஞொ

டகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ட்+அ=ட
ட்+இ=டி
ட்+உ=டு
ட்+எ=டெ
ட்+டொ

ணகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ண்+அ=ண
ண்+இ=ணி
ண்+உ=ணு
ண்+எ=ணெ
ண்+ஒ=ணொ

தகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
த்+அ=த
த்+இ=தி
த்+உ=து
த்+எ=தெ
த்+ஒ=தொ

நகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ந்+அ=ந
ந்+இ=நி
ந்+உ=நு
ந்+எ=நெ
ந்+ஒ=நொ

பகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ப்+அ=ப;ப்ப்
ப்+இ=பி
ப்+உ=பு
ப்+எ=பெ
ப்+ஒ=பொ

மகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ம்+அ=ம
ம்+இ=மி
ம்+உ=மு
ம்+எ=மெ
ம்+ஒ=மொ

யகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ய்+அ=ய
ய்+இ=யி
ய்+உ=யு
ய்+எ=யெ
ய்+ஒ=யொ

ரகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ர்+அ=ர
ர்+இ=ரி
ர்+உ=ரு
ர்+எ=ரெ
ர்+ஒ=ரொ

லகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ல்+அ=ல
ல்+இ=லி
ல்+உ=லு
ல்+எ=லெ
ல்+ஒ=லொ

வகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
வ்+அ=வ
வ்+இ=வி
வ்+உ=வு
வ்+எ=வெ
வ்+ஒ=வொ

ழகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ழ்+அ=ழ
ழ்+இ=ழி
ழ்+உ=ழு
ழ்+எ=ழெ
ழ்+ஒ=ழொ

ளகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ள்+அ=ள
ள்+இ=ளி
ள்+உ+ளு
ள்+எ=ளெ
ள்+ஒ=ளொ

றகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ற்+அ=ற
ற்+இ=றி
ற்+உ=று
ற்+எ=றெ
ற்+ஒ=றொ

னகர வரிசை குறில் வாய்பாடுகள் மட்டும்.
ன்+அ=ன
ன்+இ=னி
ன்+உ=னு
ன்+எ=னெ
ன்+ஒ=னொ

போன்றவற்றைக் கற்பித்த பின்,

அந்த எழுத்துக்களில் வரும் சொற்களை மட்டும் எடுத்துக்காட்டி விளக்கலாம்.
குறில் அ ஓசைக்கு, உயிர் மெய் எழுத்துகள் எவ்வித மாற்றமும் இன்றி எழுதப்படும்:

எடுத்துக்காட்டுகள் சில:

கந்தன், சத்தம், பந்து, வட்டம், சங்கு, பலகை, தந்தம், தமிழ், சலங்கை, தட்டம், கனவு, கதவு, கரும்பு, வளையல், வலை, வண்ணம்......

மேலே குறிப்பிட்டுள்ள சொற்களின் முதல் எழுத்துகள் யாவும் குறில் அ ஓசை உடையவை என்பதை உணர்க. இந்த ஓசை உடய எழுத்துகளில் எவ்வித மாறுதலும் இன்றி வருவதையும் காண்க.

பயிற்சி 1
பின்வரும் பத்தியில் உள்ள குறில் ‘அ’ ஓசை எழுத்தை வட்டமிடுக.

பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள்
இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.

பயிற்சி 2

செய்தித்தளில் இருந்து குறில் ‘அ’ ஓசைக்கு ஐந்து சொற்களை எழுதி அதில் உள்ள குறில் ‘அ’ ஓசை எழுத்தை மட்டும் முக்கோணம் இட்டுக் காட்டுக:

குறில் இ ஓசைக்கு மேல் சுழி மட்டும்

எடுத்துக் காட்டுகள் சில:

கிண்ணம், பின்னல், மின்னல், கிளி, சிலை, சிந்தனை, கிணறு, சிங்கம், சிறுத்தை, பிழை, கிளை, சிரிப்பு, சிகரம், சிற்பம், விண்(ஆகாயம்), விசிறி, வில், விளக்கு.......

அதாவது, மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக் காட்டில், கிண்ணம் என்ற சொல்லில் ‘க’ என்ற எழுத்திற்கு மேல் இடப்பட்டுள்ள ஒரு சிறிய வளைவுக் கோடே மேல் சுழி என்று மாணவர்களுக்குக் கற்பித்தல். இதைப்போன்றே மற்ற எடுத்துக் காட்டுகளுக்கும் விளக்கம் கூறினால் அவர்கள் குறில் ‘இ’ ஓசையை எளிதில் மனதில் இருத்திக் கொள்வர்.

இவ்வாறு பலசொற்களையும் முடிந்தால் அதனோடு தொடர்புடைய பட்ங்களையும் இணைத்த்துக் கற்பிக்கலாம்.

பயற்சி 1

பின்வரும் பத்தியில் ‘இ’ ஓசை வரும் எழுத்துகளை அடையாளம் காட்டுக:

இராமரும் சீதையும் காட்டில் தங்கி இருந்தனர். வனவாசம் முழுவதையும் வனத்தில் தான் கழிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உணவினை இலக்குவன் தான் காட்டில் சேகரித்துக் கொடுக்க வேண்டும்.

பயற்சி 2

‘இ’ஓசையில் அமைந்துள்ள ஐந்து புதிய சொற்களை உன் பாடப் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதுக.
தொடர்ச்சி அடுத்த பதிவில்:

அன்புடன்,
ஸ்ரீ.விஜயலஷ்மி,
தமிழாசிரியை, கோயம்புத்தூர்

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (30-Nov-18, 5:06 pm)
பார்வை : 1287

மேலே