கடவுளே

கடவுளே !
என் நாடுதான்
வெற்றி பெற வேண்டும்
என இவர்களும்

கடவுளே !
அந்த நாடு தோற்க வேண்டும் என மறுமுனையில்

கடவுளே !
எல்லா பந்துகளிலும்
சிக்ஸர் அடிக்க வேண்டும்
என இவன்

கடவுளே !
எல்லா பந்துகளிலும்
விக்கட் விழ வேண்டும் என
மறு முனையில் அவன்

கடவுளே !
கேட்சை பிடிக்க வேண்டும்
என இவன்

கடவுளே !
கேட்சை பிடிக்க கூடாது
என அவன்

இப்படி
இரு அணிகளும் மாறி மாறி

கடவுளை வேண்டி
குழப்புவதால் தானோ என்னவோ ?

திறமையானவன் ஜெயித்து கொள்ளட்டும் என்று

கடவுள்
குறுக்கிடுவதே இல்லை
கிரிக்கெட்டிலும்
பிறரின் வாழ்க்கையிலும்

எழுதியவர் : ந.சத்யா (3-Dec-18, 12:26 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : kadavule
பார்வை : 145

மேலே