தொலையாத வார்த்தைகள்

கவிதைமணி: நன்றி
தினமணி கவிதைமணி
தந்த தலைப்பு
"தொலையாத வார்த்தைகள் " ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்
எழுதிய கவிதை
~~~~~~~~~~~~~

ஆசை கோபம் கொலை கொள்ளை
பொய் புறட்டு காமுகம் கர்பழிப்பு
யாவும் தொலையாத வார்த்தைகள்
அடியோடு தொலைத்தி டுவோமே

பதுக்கல் ஒதுக்கல் இல்லாதார் இரப்பின் உதட்டினைப் பிதுக்கல்
தலை விரித் தாடுதிங்கே லஞ்சம்
கொடுத்தலை பெறுதலை தடுத்தும்
தொலையாத வார்த்தை களதனை
யடியோடு தொலைத்திடு வோமே

சாதி மதம் தீண்டாமை பொறாமை பொச்சரிப்பு உச்சரிப்பு நச்சரிப்பு
எச்சரிப்பு கொச்சையரிப்பு யாவும்
தொலையாத வார்த்தை களதனை
யடியோடு துடைத்திட வழித்தேடு

வாயடைப்பு வயிற்றடிப்பு அதனால் பிறப்பெடுக்கும் வறுமை இல்லாமை
உயிரை விட்டுக் கொள்ளும் நிலைமை
தொலையாத வார்த்தை களதனை
இனியேனும் தொலைந்திட வழிதேடு

°°°°°°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (2-Dec-18, 11:22 pm)
பார்வை : 167

மேலே