கொட்டும் பனிமழையில் உனக்காக 555

என்னுயிரே...
நீ புள்ளிவைத்து
மாக்கோலம் போடும்...
அழகை காண
ஓடிவந்தேன்...
கொட்டி தீர்க்கும்
பனிமழையில் உனக்காக...
என்னை கண்டதும் உன் கரங்களை
கொண்டு முகத்திற்கும்...
உன் இமைகளை கொண்டு
விழிகளுக்கும்...
இரட்டைக்கதவு
போட்டுக்கொண்டவளே...
உன் முகம்பார்க்க
ஓடிவந்த என்னை...
மலர்ந்த விழிகளோடு
என்னை பாரடி...
சில வினாடிகள் தள்ளிவை
உன் வெட்கத்தை என்னுயிரே.....