கண்ணுக்குள் மட்டும்
முதல் காதல்
முழு காதலா?
தெரிவதற்குள்
முற்றுபெற்றது!
அடுத்து ஒன்று
அதன் பேர்
காதலா?
அறிவதற்குள்
அஸ்தமித்தது
காதல் வந்தது
போனது
முதல் காதல்
மட்டுமே
நிலைத்து
நின்றது
காமம் இன்றி
கண்ணுக்குள்
மட்டும்..,