பாப்பாவும், குருவியும் உரையாடல்
பாப்பா...... குருவி குருவி நில் நில்
எனது நெல் உன் வாயில்
உண்ண உணவு தந்த எனக்கு
என்ன தரப் போகின்றாய் /
என் வீட்டு வாயிலில் உனக்கு கூடு
கட்டி தருகிறேன் ,
நிதமும் என் வீட்டில் சிறிது நேரம் தங்கி போ
உன்னை போல் பறக்க எனக்கும் ஆசை
பறக்க எனக்கும் கற்றுக் கொடு.
குருவி .... பறந்து செல்ல மனமிருந்தும்
சிறகில்லையே உன்னிடம்
இறைவன் உனக்கு எல்லாம் தந்தும்
சிறகை தரவில்லையே ஏன்/
உனக்கு அளவற்ற அறிவும் நல்ல பண்பும்
தந்திட்ட கடவுள் நிறைந்த ஆசையையும்
சேர்த்து தந்துள்ளார் ,
ஆசையுள்ளவனுக்கு சிறகுகள் தேவை இல்லை
மனிதனின் ஆசைகளே அவன் சிறகுகள் ,
பாப்பா .....ஏய் குட்டிக் குருவி /
உன் உடல் சிறிதுதான்
ஆனால் உன் எண்ணமோ சிறந்தது
உன்னை படைத்த இறைவன் தான்
என்னையும் படைத்தான்,
என்னை உன்னிலும் மேலாக
தனது சாயலாக படைத்த கடவுள்
உன்னிலும் மேலாக பறக்க விடவில்லையே
ஆனாலும் என்னைப் போல் வாழ்ந்திட
உனக்கும் ஆசை உள்ளதா /
குருவி ......வாழ வைத்த இறைவன்
எனக்கு வாழ வழியையும் வகுத்தான்
அவன் வகுத்த வழியில் வாழ்ந்தால்
இறுதிவரை இன்பம் உண்டு
அதிக ஆசை வேண்டாம் எனக்கு
இந்த வாழவே இன்பமானது இயல்பானது
இயன்றவரை பறந்து செல்ல
இதயமும் சுகமாகுது, உடலும் இலேசாகுது
வீணான விருப்பம் இல்லை
விதண்டாவாத எண்ணமுமில்லை .
பாப்பா .....உன் நல்ல எண்ணம் நல்லது
நீ என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவனிடம் வேண்டுகின்றேன்
நீ நல்ல குருவி நீ பறந்து பறந்து
இரைதேடி பக்குவமாய் அதை உண்டு
நீண்ட ஆயுள் நீ வாழ்ந்திட
வாழ்த்துகிறேன் போற்றுகிறேன்
மண்ணுலகும் விண்ணுலகும்
உனக்காக மனமார மகிழ்ந்து நீ வாழ்ந்துவிடு
குருவி ...... பாப்பா, பாப்பா நீ ஓடி ஆடி விளையாட
ஒய்யாரமாய் ஊஞ்சல் கட்டி விளையாட
அன்புடனே அணைத்து மகிழ
உனக்கு அண்ணன் உண்டு, தம்பி உண்டு
ஆசையுடன் அள்ளிஅணைத்து
தூக்கி கொஞ்ச அன்னையுண்டு, தந்தையுண்டு
நீ அன்புடனும் ,ஆசையுடனும் விளையாட
அடுத்த வீட்டு பாப்பா உண்டு
நீ கொடுத்து வைத்த பிறவியப்பா
பறந்து செல்ல சிறகிருந்தும் உறவில்லையே எனக்கு
மனிதனாக பிறப்பதற்கு ஆசையுண்டு .