இனிக்கட்டும்
இனிக்கட்டும்
===============================================ருத்ரா
அன்பே
இந்த நாள் இனிய நாள்.
இந்த உப்பு புளி மிளகாய்
வாழ்க்கைக்கு
தினம் தினம் நமக்கு
தூண்டில் வீசப்படுகிறது.
நம் இதயங்களின் கடலில்
நமது கனவு என்பதே
மிகவும் மிகவும் ஆழம்.
ஒரு மயிலிறகு போதும்.
ஆம்
அது உன் புன்னகை.
என் மனத்தின்
ஆழக் கடல்களுக்குள்ளும்
ஆயிரம் வானங்களின் மண்டலங்களில்
ஒரு ஊஞ்சல் கட்டும்.
காலண்டர் அட்டையில்
நாம் தாண்டப்போகும்
அந்த பிப்ரவரி பதினாலு
என்பது வெறும் காகிதத்துண்டா?
அந்த மைல் கல்
ஒரு வைரக்கல் கொண்டு
வடிவு செய்தது.
நம் காதல் பயணம்
இனிக்கட்டும்...அன்பே
இனிக்கட்டும்.
==================================================

