காதலன்
அவன் கண்கள்
சூரிய ஒளித்திரை....
அதை கண்டேன்
அந்தோ கிரகணம் ஆனதே...!
அவன் விழிகள்...
கிழக்கு மேற்காய்
அலையும் விண்மீன்
என்னில் பயணம் ஆனதே..!
அவன் கன்னம்
தெளிந்த பாலைவனம்...
அதன் குழியில் என்
உயிர் சயனம் ஆனதே..!
அவன் உதடுகள்
பிரியும் நேரம்
கணித்து என் உதடுகள்
இடத்தை அடைக்க விரும்புதே..!!!
ஆணழகன் அவனில்லை
ஆனாலும் பெண்ணிவள்
கண் காட்டும் அழகன் அவனே
அவனே என் காதலன்..!!