அவன் அவள் இறைவன்
அவன்:
இந்த நொடி இறைவன் வந்து
இந்த உலகம் உன் ஆட்சியின்
கீழ் என்றால் நான் சொல்வேன்
ஏற்கனவே உலகம் என் கைய்யில்
தான் இனி தேவலோகமே
தந்தாலும் வேண்டாம் என்பேன்!
அவள்:
இந்த நொடி இறைவன் வந்து
இன்னும் என்ன வேண்டும்
என்று கேட்டால் நான்
சொல்வேன் இப்படியே என்
உயிரை கொண்டு சென்றுவிடு
இதற்கு மேல் வேறெதுவும்
வேண்டாம் என்று!

