சொல்வலி

மனிதன் நாவில் பிறக்கும்
பெருவலி மிகு சொல்லே!
உன் பொருளுக்கு இத்தனை
உயிர் சேர்த்தது யாரோ?

மனமொத்த நண்பர்கள்
மனங்கசந்து பிரியச் செய்கிறாய்!
அறிமுகம் அறியாதவனை
ஆருயிர் தோழன் ஆக்குகிறாய்!

தோல்வி அடைந்தவன்
மனம் நோகச் செய்கிறாய்!
மனமுடைந்த ஒருவன்
மறுவாழ்வுக்கு துணை நிற்கிறாய்!

பெற்ற மகனை
மாற்றான் எனச் செய்கிறாய்!
பரம்பரை பகையைச்
சீரமைத்து விடுகிறாய்!

மனிதன் வாழ்வை
நொடிப் பொழுதில்
புரட்டிப் போடும்
விந்தை பொருளே!

உன் வலிமை புரிந்து
உரிய வழி சொல்லாடும் திறவோனே
உயரிய நிலையை அடைவான்!
வாழ்வின் சுவையை உணர்வான்!

எழுதியவர் : சுவாதி (12-Apr-19, 7:55 pm)
சேர்த்தது : சுவாதி
பார்வை : 98

மேலே