மக்கள் தொகை மிகுந்த நாட்டில்
நீதிமன்றங்களும் சிறைச்சலைகளும்
நாட்டில் பெருகுவது நலமா?
மருத்துவமனைகளும் மருந்துக்கடைகளும்
மடமடவென நாளும் வளர்வது சரியா?
மக்கள் தொகை மிகுந்த நாட்டில்
மகத்தான இயந்திரத்தின் ஆட்சி தேவையா?
கட்டடங்களில் மட்டும் கவனம் செலுத்தும்
கல்விக் கூடங்கள் கணக்கின்றி வளர்வது நீதியா?
பொது மக்கள் நலங்காக்கும் அரசுத் துறை
பொறுப்பின்றிச் செயல்படுவது புனிதமா?
புகுத்துவோம் பொது மக்களுக்குப் புத்தறிவை - உலகில்
பொருத்தமின்றி இருப்பதை வேறோடுக் களைவோம்.
- - - நன்னாடன்.