குபீர்ன்னு வையுடா

'குபீர்'ன்னு வையுடா!
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●
எங்கடா சாமி ரண்டு மூணு நாளா வீடு தங்காம அலைஞ்சிட்டு திரியற?
@@@@@
நானும் பலபேரைத் தேடிப்போய்க் கேட்டுப் பாத்தேன். யாரும் நாங் கேட்டதுக்குச் சரியான பதில் சொல்லல பாட்டிம்மா.
@@@@@
என்னனு வெளக்கமாச் சொல்லுடா மாரிமுத்து.
@@@@
என் மனைவி மங்கைக்கு ரட்டைக் கொழந்தை பொறந்ததாவது தெரியமா தெரியாதா?
@@@@
ஏன்டா மாரி அதுகூடத் தெரியாம இருப்பாளா உம் பாட்டி. மணி மணியா ரண்டு ஆம்பளக் கொழந்தைங்க பொறந்திருக்கறாங்க. சரி அவுங்களுக்குப் பேருங்கள முடிவு பண்ணீட்டீங்களா?
@@@@@
ஒரு பையனுக்கு ஒரு புனிதமானவர் பேரை முடிவு பண்ணீட்டேன். அதுக்குப் பொருத்தமா இன்னொரு பேரைத் தெரிஞ்சுக்கத்தான் மூணு நாளா சில பள்ளிகள் கல்லூரிகளுக்குப் போயி இந்தி ஆசிரியர்கள் பேராசிரியர்களக் கலந்து அவுங்க உதவியைக் கேட்டேன். யாரும் நான் எதிர்பார்த்த பதிலைச் சொல்லலீங்க பாட்டிம்மா.
@@@@@
எங்கிட்டச் சொல்லுடா.
@@@@@
ஒரு பையனுக்கு 'கபீர்'ங்கற பேர முடிவு பண்ணியாச்சு. இன்னொரு பையனுக்கு அதே மாதிரி பேரு வச்சத்தான் நல்லா இருக்கும் பாட்டிம்மா.
@@@@@
அட போடா துப்புக்கெட்ட மாரிப் பயலே. ஒரு கொழந்தை 'கபீர்'ன்னா இன்னொன்னு 'குபீர்'. இதுக்குப் போயி அலைஞ்சிட்டு திரியறயே.
@@@@@
ரொம்ப நன்றி பாட்டிம்மா. கொழந்தைங்களுக்குப் பேரு வைக்கிறதில நீங்க பெயர் ஞானி பாட்டிம்மா. 'கபீர்' - 'குபீர்'. அருமையான பொருத்தமான பேருங்க பாட்டிம்மா.
■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Kabir = the great.

எழுதியவர் : மலர் (29-Apr-19, 9:44 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 146

மேலே