சிரிச்சிட்டே இருப்பாரா
சிரிட்டே இருப்பாரா?
■■■■■■■■■■■■■■
நான் ஆரம்ப பள்ளில படிக்கிற காலத்திலே என்னோட வகுப்பில சந்திரசேனான்னு ஒரு பொண்ணு இருந்துச்சு. அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். அந்தப் பொண்ணு சொல்லுச்சு: சந்திர(ன்) நிலாவைக் குறிக்குது. 'சேனா' -ன்னா சேனை. தமிழ்ல படைன்னு அர்த்தம்னு சொல்லுச்சு. நான் மூணாம் வகுப்புப் படிக்கும் போது ஆடு மேய்க்க பள்ளிக்கூடத்திலிருந்து என்னை நிறுத்திட்டாங்க. அப்பறம் அந்த சந்திரசேனா பத்தி இதுவரைக்கும் எதுமே தெரில. நம்ம ஊருக்கும் அஞ்சு மைல் தூரம். நான் படிச்ச பள்ளி இங்கிருந்து மூணு மைலு..அந்தப் பொண்ணு வீட்டுக்கு ரண்டு மைவுன்னு கேளுவிப்பட்டிருக்கிறேன்.
@@@@@
இப்ப எதுக்கு அந்தக் கதையச் சொல்லறீங்க?
@@@@
இல்ல, ஒரு வாரமா தொலைக் காட்சிச் செய்தில 'சிரிசேனா, சிரிசேனா' -ன்னு சொல்லிட்டு இருக்கறாங்க. அவரு பேருக்கு அர்த்தம் சிரிச்சிட்டு இருக்கிற சேனைன்னு அர்த்தமா?
@@@@@
உங்க பேரு ஆராய்ச்சி அளவே இல்ல பாட்டிம்மா. சிங்கள மொழில 'சிறி'-ன்னா என்ன அர்த்தமோ எனக்கு என்ன பாட்டி தெரியும்?