பீருன்னு பேரா

பீருன்னு பேரா?
■■■■■■■■■■■■■■■■■■■■■
ஏன்டா நண்பா உன்னோட ரட்டைக் கொழந்தைங்களுக்குப் பேரு வச்சாச்சா? நீ பெரிய மட்டையாட்ட (கிரிக்கெட்) இரசிகனாச்சே அதான் கேட்டேன்.
@@@@@
ஒரு பையனுக்கு 'சடேஜா'ன்னு பேரு. இன்னோரு பையனுக்கு 'கம்பீர்'ன்னு பேரு வச்சிருக்கோம்.
@@@@@
(பாட்டி குறுக்கிட்டு)
ஏன்டப்பா கொள்ளுப்பேரா பீரு குடிக்கிறவங்கெல்லாம் தொந்தியும் தொப்பையுமா திரியறாங்களே. அந்தக் கருமம் பிடிச்ச கம்பு பீரா கம்பாத பீருன்னெல்லாம் பெத்த பிள்ளைக்குப் பேரு வைக்கிறதா. தமிழ்ல பேருக்கா பஞ்சம்.
@@@@@
நான் மட்டையாட்ட ரசிகன் பாட்டி. என்னோட ரசனைக்கேத்த பேருங்கள வச்சது தப்பா?
@@@@
இன்னோரு பையம் பேரு 'சடேசா'. இந்த மாதிரி பிறமொழிப் பேரையெல்லாம் நம்ம பிள்ளைங்களுக்கு வச்சு நம்ம தாய்மொழியைக் கேவலப்படுத்தக்கூடாதுடா.
@@@@
அட போங்க பாட்டி. தமிழ் மக்கள்ல 95% பேரு அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்க விரும்பறதில்ல. எப்பவும் பெரும்பான்மையின் பக்கம் நிக்கறதுதான் நல்லது. தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ப் பேராசிரியர்களே அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வச்சுத்தான் பெருமைப்படறாங்க. காலம் மாறிப்போச்சு பாட்டிம்மா.
@@@@
ஆமாம்டப்பா. கடைத்தீனி தின்னுட்டு திரியற உனக்கெல்லாம் வீட்டுச் சாப்பாடும் பிடிக்காது. தாய்மொழிப் பேரும் பிடிக்காது.

எழுதியவர் : மலர் (28-Apr-19, 9:42 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 86

மேலே