வாணிதாசன்
நீ கவிபுனையக்
காரணம்
கலைவாணி
நான் கவிபுனையக்
காரணம்
தலைவா நீ
உனக்கு மட்டும்
பல் முத்து
முளைக்காது
சொல் முத்து
முளைத்தது
எப்படியோ
நீ புதுவையை
ஆளாது
தமிழை ஆண்ட
ரங்கசாமி
முத்தமிழை
முத்தமிட்டு
புத்தமிழ் செய்தவர் நீர்
பாரதி
பாற்கடல் கடையாது
நூற்கடல் கடைந்த
சீனிவாசன்
நீயோ
அந் நூற்கடலில்
சொற்கடல் கடைந்த
வாணிதாசன்
உயிர் எழுத்துக்கள்தான்
உன் உயிர்
மெய் எழுத்துக்கள்தான்
உன் மெய்
உன் மை
உன் மெய்
இரண்டும் எப்பொழுதும்
எழுதுவது உண்மை
நீ
வாணிதாசன்
அல்ல
தமிழை ஆய்ந்த
ஞானிதாசன்
இளம்
கவிகளை கரைசேர்த்த
தோணிதாசன்
கவிதை ஊற்றெடுக்கும்
கேணிதாசன்
உன்
கற் பனைதான்
நற் பனையாய்
கவிகளுக்கு
தமிழ்க்கோடையில்
கவிதை
நுங்கு அளித்தது
உன்னை
பிரம்மன் படைக்கவில்லை
கம்பன் படைத்தான்
நீ
மனிதனாய்ப் பிறந்தாய்
கவிஞனாய் இறந்தாய்
இடையில் கவிதையாய்
இருந்தாய்
கவியே
வளரட்டும் உன் கலை
உன்னை வணங்கட்டும்
என் தலை

