இசைக்கருவி

புல்லாங்குழல்:

புல்லாங்குழல் என்பது ஒரு பழமையான இசைக்கருவி. இது புல் என்னும் ஒரு வகையான மூங்கிலில் செய்யப்படுவதால் இதற்கு புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது.சிலா் புல்லாங்குழல் தான் முதல் இசைக்கருவி என்று கூறுகின்றனா். இதற்கு பரவலாக பேசப்படும் ஒரு கதை. ஆதி மனிதன் காட்டில் வாழும் பொழுது ஒரு சிறிய வண்டு மூங்கிலை துளையிட்டு உள்ளே போனபோது சத்தம் ஏற்பட்டதால் தான் புல்லாங்குழல் உருவாகியது என்று ஒரு கதை உண்டு.பல நாடுகளில் புல்லாங்குழல் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் புல்லாங்குழல், சீனாவில் டிசி,இத்தாலியில் பிக்கோலு.. இன்னும் பல பெயர்கள்.ஒவ்வொரு புல்லாங்குழலும் பல மாற்றங்கள் இருக்கும். வட இந்தியர்கள் மிக நீலமாக வைத்திருப்பார்கள். தென்னிந்தியர்கள் கர்னாடக இசைக்கு ஏற்றவாறு சிறிதாக 7துளைகல் இருக்கும்.

புல்லாங்குழல் செய்யும் முறை:

மூங்கில் மரத்தை கனவுக்கு கனவு வெட்டி. பின் தண்ணீரில் கழுவிய பிறகு புங்கமரத்து எண்ணெய்யில ஊரவச்சிட்டு நெருப்புல கருகாம வாட்டி எடுத்துட்டு. பின் மீண்டும் புங்கமரத்து எண்ணெய்யில 2 நாட்கள் ஊரவச்சிட்டு நெருப்புல கருகாம வாட்டி எடுத்துட்டு பக்குமா மூங்கில் கம்புகளை தட்டி பார்க்கும் போது கொட்டாங்குச்சி சத்தம் கேட்டால் புல்லாங்குழல் நல்லா வரும். பின் ஒரு இரும்பு கம்பியை வைத்து 7-முதல் 8 துளைகள் போடுவார்கள். இடப்பக்கம் அடைத்துயிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். முதல் துளை பெயர் முத்திரைத் துளை.

திருக்குறள்:

குழலினிது யாழினிது என்பதும்
- மக்கள்
மழசைச்சொல் கேளா தவிர்.

என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலில் சொல்லுகின்றார்.
குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழ்கின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம் சுப்பிரமணிய சுவாமி.

இப்படி உலகம் முழுவதிலுமுள்ள பல விதமான இசைகளுக்கு ஒத்ததாகப் பல்வேறு சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு விதமாகப் புல்லாங்குழல்கள் இருக்கிறது.

எழுதியவர் : (18-May-19, 12:15 pm)
சேர்த்தது : Ramkabilan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே