முதுமொழிக் காஞ்சி 76

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
இன்பம்வெய் யோர்க்குத் துன்ப மெளிது. 6

- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், முயன்றுவரும் தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும் துன்பம் எளிது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-19, 8:44 am)
பார்வை : 10
மேலே